நைஜீரியாவில் 2.5 கோடி பேர் போதிய உணவின்றி வாடும் ஆபத்து
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நைஜீரியாவில் 2 கோடியே 50 இலட்சம் பேர் போதிய உணவின்றி வாடும் ஆபத்து இருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அவசரகால நிதியமைப்பு, யுனிசெப் அறிவித்துள்ளது.
தற்போது நைஜீரியாவில் 1 கோடியே 70 இலட்சம் பேர் போதிய உணவு பாதுகாப்பின்மையை அனுபவித்து வருவதாகவும், இதில் 60 இலட்சம் பேர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கிறது ஐ.நா. அமைப்பு.
தற்போதைய 1கோடியே 70 இலட்சம் என்பது, ஜூனுக்கும் ஆகஸ்ட்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில் 2 கோடியே 50 இலட்சமாக உயரும் என்ற அச்சத்தை வெளியிட்ட யுனிசெப் அமைப்பு, குழந்தைகளே இதனால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போதிய சத்துணவின்றி அவர்கள் பெரிய அளவில் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாகவும் கவலையை வெளியிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் அதிக அளவு உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியாவின் 6 மாநிலங்களில் ஏறக்குறைய 6 இலட்சத்து 50,000 குழந்தைகளுக்கு அடிப்படை உணவு உதவிகளை வழங்கி காப்பாற்றியுள்ளது ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்