அரசியல் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசுத்தலைவரிடம் விண்ணப்பம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க உதவவேண்டும் என யாழ்ப்பாணம் பகுதிக்கு பொங்கல் கொண்டாட வந்த இலங்கை அரசுத்தலைவரிடம் பொதுமக்கள் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட்ட தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு அதனைக் கொண்டாட யாழ்ப்பாணம் வந்த அரசுத்தலைவர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்த தமிழர் அமைப்புக்கள், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும், மற்றும் தமிழர்களிடமிருந்து இராணுவத்தால் பறிக்கப்பட்ட நிலங்கள் திருப்பித் தரப்படவேண்டும் என்ற விண்ணப்பங்களை முன்வைத்தனர்.
இலங்கையின் மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் அரசியலைப்பின் 13வது சட்டத் திருத்தம் உடனடியாக அமல்படுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பமும் அரசுத்தலைவரிடம் வழங்கப்பட்டது.
தமிழர்களின் அறுவடைத் திருவிழாவான தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட அரசுத்தலைவர் விக்ரமசிங்கே அவர்கள், மாநிலங்களுக்கு அதிகாரத்தை வழங்கும் சட்டதிருத்தம் அடுத்த இரண்டாண்டுகளுக்கு அமைப்பு ரீதியாக திட்டமிட்டு தொடர்ந்து எடுத்துச் செல்லப்படும் என உரைத்தார். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்