தேடுதல்

சிங்கப்பூர் சிங்கப்பூர் 

இனியது இயற்கை - உயர்விற்கான மேற்கோள் வானமே

வானளவு உயர்ந்த பெருமை, வான்புகழ் கொண்ட வள்ளுவம், வானுயர்ந்து நின்றான், வானளவு உயர்ந்த கட்டடம் என்று வானத்தைத்தான் ஓர் எல்லையாகக் காட்டுகிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இதைத்தான், ஒன்றொடு ஒன்று ஒட்டியும் ஒட்டாமலும் கலந்தும் கரைந்தும் இருப்பது உலகம் எனச் சொல்ல வருகிற தொல்காப்பியர்,

  • நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்
  • கலந்த மயக்கம் உலகம், என்கிறார்.

ஐந்தும் ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பதுபோல் தோன்றினாலும், ஆகாயம்தான் அனைத்திலும் உயர்ந்து நிற்கிறது, உயர்விற்கான மேற்கோளாகவும் விளங்குகிறது. ஆகாயம் தரும் மழை நின்றுபோனால் என்னவாகும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது என்பதைத்தான்,

  • தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
  • வானம் வழங்கா தெனின், என்கிறார் வள்ளுவர்.

வான் பொய்த்தால் வாழ்க்கையே இல்லை என்கிறோம். விவசாயத்திற்கு மழையை நம்பியிருக்கும் பூமியை வானம் பார்த்த பூமி என்கிறோம்.

மிக உயர்ந்ததைப் பற்றி ஒப்புமையுடன் கூறும்போது, வானத்தைத்தான் எடுத்துரைக்கின்றோம். வானளவு உயர்ந்த பெருமை, வான்புகழ் கொண்ட வள்ளுவம், வானுயர்ந்து நின்றான், வானளவு உயர்ந்த கட்டடம் என்றும் வானத்தைத்தான் ஓர் எல்லையாகக் காட்டுகிறோம். அவ்வளவு உயர்ந்தது வானம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2022, 14:40