தேடுதல்

இரவில் வானம் இரவில் வானம் 

இனியது இயற்கை - ஆகாயம் ஓர் அதிசயம்

ஐம்பூதங்களில் தீயையும் ஆகாயத்தையும்தான் மனிதனால் மாசுபடுத்தமுடியாமல் இருந்துவந்தது. ஆனால், இப்போது ஆகாயத்தையும் தொடத்துவங்கிவிட்டான் மனிதன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நாவலாசிரியர்கள், கவிஞர்கள், மெய்யியலாளர்கள், அறிவியலாளர்கள் என பலருக்கும் விவாதப்பொருளாகியுள்ள வானம், பலரை ஈர்த்துள்ள அதேவேளையில், மேலும் பலரை பயமுறுத்தியுமுள்ளது. நம் இதயங்களைக் கவர்ந்துள்ள அதேவேளை, அதன் மர்மங்கள் நம்மைத் திகிலடைய வைத்துள்ளன. இன்றுவரை ஆகாயத்தை முழுமையாக எந்த அறிவியலாளராலும் தோண்டிப் பார்க்க முடியவில்லை.

ஐம்பூதங்களில் தீயையும் ஆகாயத்தையும்தான் மனிதனால் மாசுபடுத்தமுடியாமல் இருந்துவந்தது. ஆனால், இப்போது ஆகாயத்தையும் தொடத் துவங்கிவிட்டான் மனிதன். கண்ணுக்குத் தெரியாத வகையில் மனிதகுலம் இதனையும் மாசுப்படுத்தித்தான் வருகிறது. ஆனால், ஆகாயம் அதை தன்னிடம் நீண்டகாலம் வைத்துக்கொள்வதில்லை. சரியான நேரம் காலம் பார்த்து, அதை அந்த மனிதருக்கே திருப்பிக் கொடுத்துவிடுகிறது. இதில் ஒன்றுதான் அமிலமழை.

விண்மீன்கள் நிறைந்த வானம் நம் கண்பார்வையின் எல்லையில் நீல நிறமாகத் தெரிகிறது. ஆனால், எல்லை என்ற வரைகோடின்றி இருப்பதுதான் நம் அண்டவெளி. இங்கு விண்மீன்கள் நிலையாக நிற்கின்றன, ஆனால் மேகங்கள்தான் வலம் வந்துகொண்டே இருக்கின்றன. நாம் அண்ணாந்து பார்க்கும் நீலவானம் என்பது ஆகாயம் அல்ல. ஆகாயத்திற்கு “வெளி” என்றொரு பெயரும் உண்டு. “பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமே” என தாயுமானவர் சொல்லியுள்ளது போல ஆகாயம் என்பது எங்கும் நிறைந்துள்ளது, அது நம்முள்ளும் உள்ளது, நம்மிடையே உள்ள இடைவெளியிலும் நிறைந்து இருக்கிறது. ஆகாயம் ஓர் அதிசயம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 டிசம்பர் 2022, 15:56