இனியது இயற்கை - கிரகணம் என்றால் என்ன?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்
கிரகணம் என்பது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது, சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது அந்த வான் பொருள், நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இந்நிகழ்வு, சூரியக் குடும்பத்துக்குள் நிகழும்போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர மறைப்பு என்றும் சொல்லலாம். graha என்ற சமஸ்கிருத சொல்லுக்கும் மறைப்பு என்பதே பொருள்.
கிரகணம் என்பதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்லது ஒரு பார்வையாளர் பார்க்கும்போது, ஒரு பொருள் நகர்ந்து செல்லும்போது, ஏற்கனவே இருக்கும் பொருளை மறைப்பது போன்று தோன்றும் காட்சியாகும்
வான்வெளியில் ஒரு பொருள் இன்னொரு பொருளை மறைப்பதை நாம் கிரகணம் என்கிறோம். எந்த வான்பொருள் மறைக்கப்படுகிறதோ, அதன் கிரகணம் என்கிறோம். சூரியன் மறைக்கப்பட்டால் சூரிய கிரகணம். சந்திரன் மறைக்கப்பட்டால், அது சந்திர கிரகணம்.
சூரிய மற்றும் சந்திர கிரகணம் ஏற்பட வேண்டும் என்றால், சூரியன், சந்திரன் மற்றும் பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் 90 டிகிரியில் இருக்கவேண்டும். இந்நிலை எல்லா காலத்திலும் ஏற்படாது. காரணம் இவை மூன்றும் தன்னிலையில் சரிவாக உள்ளன. அதாவது லேசாகச் சாய்ந்து காணப்படுகின்றன. சூரியன் 7 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது. சந்திரன் 5 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது. பூமி 23.5 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது. இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில், ஒன்றை ஒன்றை நேரிடையாக மறைக்கும்போதுதான், அதாவது, அவை அனைத்தும் 90 டிகிரியில் நின்று ஒன்றை ஒன்று நேரிடையாக மறைக்கும் போதுதான் கிரகணம் ஏற்படுகிறது.
பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் நிலவினால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது. நிலவு மறைக்கப்பட்ட பகுதி கறுப்பாகவும் அதன் விளிம்புகள் நெருப்பு வளையம் போலவும் தோன்றும். இதுதான் கங்கண சூரிய கிரகணம், நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்பதாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்