தேடுதல்

அகமதபாத்தில் தீ விபத்து(23/03/2021) அகமதபாத்தில் தீ விபத்து(23/03/2021) 

இனியது இயற்கை - தீபமாகவும் தீப்பந்தமாகவும் ஐம்பூதம்

கடந்த 30 ஆண்டுகளின் வரலாற்றை திரும்பிப் பார்த்தோமானால், தமிழகத்தின் 4 முக்கிய தீ விபத்துக்கள் நினைவுக்கு வந்து வேதனையை அதிகரிக்கின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நெருப்பு என்பது ஆக்கவும் செய்கிறது, அழிக்கவும் செய்கிறது. தீபமாகவும் தீப்பந்தமாகவுமிருக்கும் ஐம்பூதம், தீ விபத்தாக மாறி எத்தனையோ உயிர்களை வரலாற்றில் பலிகொண்டுள்ளது. அண்மைக் காலங்களை, அதாவது கடந்த 30 ஆண்டுகளின் வரலாற்றை திரும்பிப் பார்த்தோமானால், தமிழகத்தின் 4 முக்கிய தீ விபத்துக்கள் நினைவுக்கு வந்து வேதனையை அதிகரிக்கின்றன. 1997ஆம் ஆண்டு சூன் 7ம் தேதியன்று தஞ்சை பெரிய கோயிலில் 48 பேரைப் பலிவாங்கிய  தீ விபத்து, 2001 ஆகஸ்ட் 6ஆம் தேதி 28 மன நோயாளிகள் உடல் கருகி இறப்பதற்கு காரணமான ஏர்வாடி தீ விபத்து, 2004ஆம் ஆண்டு சனவரி 23ம் தேதியன்று 50 பேர் இறந்த திருவரங்கம் திருமணக்கூட தீ விபத்து, அதே ஆண்டு சூலை 16ல்,  94 பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து என நான்கு விபத்துக்கள் தமிழக வரலாற்றில் மறக்கமுடியாதவை.

தஞ்சை பெரியகோயில் தீவிபத்து

பிரகதீசுவரர் கோயில் தீவிபத்து என்பது தமிழ்நாட்டின் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 1997ஆம் ஆண்டு சூன் 7ம் தேதியன்று நேர்ந்த தீவிபத்தைக் குறிக்கிறது.

1997 ஆம் ஆண்டு கோயிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் நிகழ்ந்த தீ விபத்தில் 48 பேர் இறந்தனர், மற்றும் 86 பேர் காயமடைந்தனர். இந்நிகழ்வு, குடமுழுக்கு விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்தது. கோயில் வளாகத்தில் யாகசாலை சடங்கு விழாக்களுக்காக ஒரு தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அருகில் வைக்கப்பட்ட பட்டாசு இந்தப் பந்தல் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கடுமையான வெயிலில் காய்ந்துபோயிருந்த அந்த பந்தல் கூரையில் தீ வேகமாகப் பரவியது என நம்பப்படுகிறது. இருப்பினும், மின்னாக்கியிலிருந்து ஏற்பட்ட தீப்பொறியாலேயே தீவிபத்து ஏற்பட்டது என்ற மாற்றுக் கருத்தும் உள்ளது. பெரும்பாலான இறப்புக்களுக்கு, கார்பன் மோனாக்சைடால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தது, மற்றும் ஒரு சில மரணங்கள் தீக்காயங்களாலும் ஏற்பட்டது. யாகசாலையில் நெய் போன்ற தீயிக்கு ஒத்துழைப்பான பல பொருட்கள் இருந்தன, இதனால் தீ வேகமாகப் பரவியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2022, 16:41