பிரான்சில் காடுகளில் தீ பிரான்சில் காடுகளில் தீ 

இனியது இயற்கை – இயக்கவும் எரிக்கவும் பயன்படும் ஐம்பூதம்

தீ, தனல், அக்கினி, அரி, கனல், சுடர், தழல், அங்கி, வன்னி, அனல், கனலி, ஆரல், எரி என பல பெயர்கள் நெருப்புக்கு வழங்கப்படுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நெருப்பானது மனிதர்கள் மத்தியில் பல தேவைகளுக்குப் பயன்படுகின்றது. இந்நெருப்பையே மனிதர்கள் அக்கினி தேவன் என வேத காலம்தொட்டு இன்று வரை வழிபடுகின்றனர். தீ, தனல், அக்கினி, அரி, கனல், சுடர், தழல், அங்கி, வன்னி, அனல், கனலி, ஆரல், எரி என பல பெயர்கள் நெருப்புக்கு வழங்கப்படுகின்றன.

அக்கால மனிதன் கற்களை உராய்வதன் வழியாக நெருப்பைக் கண்டுபிடித்தான். ஆதிகாலத்தில் இரு கூழாங்கற்களை உரசி அதன் மூலம் காய்ந்த இலைச் சருகுகளையும் குச்சிகளையும் கொண்டு நெருப்பை உண்டாக்கினர். பின்னர் அறிவியல் வளர்ச்சியினால் கந்தகம் கொண்டு தீக்குச்சிகள் தயாரிக்கப்பட்டு, தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பு உண்டாக்கப்பட்டது. அதை வைத்து விலங்குகளைப் பயமுறுத்தினான், உணவு சமைத்தான். இவ்வாறு அன்று கண்டுபிடிக்கப்பட்ட நெருப்பானது இன்று பல பரிணாம வளர்ச்சியோடு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பல தொழில்நுட்பங்களின் செயற்பாடுகளின்போது நெருப்பு பயன்படுகின்றது. உடலின் உள்ளே ஒரு சக்தியாக உடலை இயக்கவும் இறந்தபின்பு உடலை எரிக்கவும் நெருப்பு பயன்படுகின்றது.

நெருப்பு என்பது வெப்பத்தை உமிழும் செயலாகும். நெருப்பு எரிவதற்கு பிராணவாயு எனப்படும் ஆக்சிசன் தேவைப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2022, 14:07