இனியது இயற்கை – காணமுடியும் ஆனால், கைக்குள் அடங்காது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மழை தரும் கதிரவனும், குளிர்தரும் நிலவும், ஒளிதரும் நெருப்பும் மிகுந்த அன்புக்குரியன என்பதை முற்காலத்திலேயே தமிழ் இனம் கண்டிருந்தது. அதனால்தான் நெருப்பு வழிபாடு தமிழர்களிடம் தோன்றியது. நெருப்பின் மேல் சத்தியம் செய்வது, நெருப்பைத் தாண்டுவது, தீக்குண்டத்தில் இறங்கி நடப்பது, தீச் சட்டி எடுத்து கோவிலை வலம் வருவது போன்ற வழக்கங்கள் நாளடைவில் தோன்றின. சேர மன்னர் தீயை வழிபடும் பிரிவைச் சார்ந்தவர்கள். எனவே, அண்டையிலுள்ள கன்னடத்தார் தமிழர்களை தீக் குலத்தவர் என்னும் பொருளில் திகளர் என அழைக்கின்றனர். எனவே தீ தொடர்பான பழக்கவழக்கங்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்தது என அறியமுடிகிறது.
ஐம்பூதங்களில் நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் வரிசையில் நெருப்பு நடுவில் வைத்து எண்ணப்படுகிறது. நெருப்பு கண்ணுக்குப் புலப்பட்டும், கையால் தொடும் திடப்பொருள் ஆக புலப்படாமலும் உள்ளது. நெருப்பு தன் இருப்பைக் காட்டிக்கொள்கிறது, ஆனால், நீளம், அகலம் உயரம் என்னும் திடப்பொருளுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதில்லை.
உயிர் எவ்வாறு நிலையற்றதோ அதேபோல நெருப்பும் நிலையற்றது. ஒரு நாள் இருக்கும் மறுநாள் இருப்பதில்லை. நாள் கணக்கு மட்டும் அல்ல ஒரு நிமிடம் இருக்கும் அடுத்த நிமிடம் இருப்பதில்லை. எனவே, ஐம்பூதங்களில் நிலையற்றது நெருப்பாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்