இனியது இயற்கை - திருவரங்கம் திருமணக்கூட தீவிபத்து
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருவரங்கம் திருமணக்கூட தீ விபத்து என்பது, தமிழ்நாட்டின் திருவரங்கத்தில் உள்ள பத்மபிரியா திருமண மண்டபத்தில் 2004ஆம் ஆண்டு சனவரி 23ம் தேதியன்று நேர்ந்த தீ விபத்தைக் குறிப்பதாகும். இந்த விபத்தில் மணமகன் உட்பட 57 பேர் உயிரிழந்தனர், மேலும் 50 பேர் காயமடைந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம், காணொளி படப்பிடிப்புக் கருவியை இணைக்கும் மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவே என்று கண்டுபிடிக்கப்பட்டது, மின்கசிவினால் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓலைப் பந்தலில் தீப்பற்றியதால் இது ஏற்பட்டது.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. 2012ஆம் ஆண்டு சூன் 14ம் தேதியன்று, நீதிபதி இராமசாமி, திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு, இரண்டு ஆண்டு கடுஞ்சிறைத்தண்டனை மற்றும் விபத்தில் இறந்தவர்கள் ஓவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா 50,000 ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் இழப்பீடாக அளிக்கவேண்டும் என உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் கூரை ஒப்பந்ததாரரான செல்வம் தீர்ப்புக்கு முன்பே இறந்துவிட்டார். காணொளி படப்பிடிப்பாளரான தர்மராஜிக்கு ஓராண்டு சிறையும், மண்டப மேலாளரான சடகோபனுக்கு ஓராண்டு தண்டனையும், மின்பணியாளர் முருகேசனுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்