இனியது இயற்கை – சுகம் தரும் சூரியக் குளியல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“வரம் தருபவனாகிய சூரியனே! நீ இருளை அகற்றி உன் ஒளியால் என் புலன்களை நிரப்பு! உன் சுடர் என் அறிவை துலங்க செய்வதாக!” என்கிறார் ஒரு இயற்கை ஆர்வலர். கடவுளின் வரமாக அமைந்துள்ள சூரிய ஒளி மனிதருக்கு வாரி வழங்கும் நன்மைகள் ஏராளம்! தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் சூரியக் குளியல் போடுவது நமக்குப் பல்வேறு வகைகளில் பலன்களைத் தருகின்றது. தோலின் மேலடுக்கில் காணப்படும் நைட்ரிக் ஆக்சைட் சூரிய ஒளியில் படும்போது இரத்த நாளங்கள் விரிவடைதுடன் நல்ல உறக்கமும் பெற முடிகின்றது. முகப்பரு, மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் மற்றும் பூஞ்சை தோல் தொற்று நோய்கள் முதலிய எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாக்கின்றது. மேலும், குழந்தைகளைத் தினமும் காலை 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் வைத்திருந்தால் போதும், அது அவர்களுக்குப் பல்வேறு நன்மைகளை அளிக்கும். சூரிய ஒளி நம் தோலில் படுமாறு இருந்தால் போதும் எவ்வகை புற்றுநோயும் வராமல் தடுக்க முடியும். நமது தோல் அதிகப்படியான வைட்டமின் D-ஐ உற்பத்தி செய்ய வேண்டுமெனில், நாம் தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது நல்லது. இதனால் நமது பார்வை புதுப்பொலிவு பெறும். சூரிய ஒளிதான் வைட்டமின் D-க்கான மிகப் பெரிய ஆதாரமாக அமைவதுடன், நமது உடலில் கால்சியம் உண்டாகவும் உதவுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்