இனியது இயற்கை–கோவிட் தொற்றைவிட ஆபத்தானது காற்று மாசு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கோவிட் பெருந்தொற்றை ஒரு பேரிடர் என்று நாம் கருத்தியதுபோல காற்று மாசுபாடும் ஒரு பேரிடர்தான் என்றெண்ணி அதனை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் தொழிற்சாலைகள் விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றனவா இல்லையா என்பது பற்றி எவ்வித கண்காணிப்பும் முழுமையாகச் செய்யப்படுவதில்லை என்பது வருந்தத்தக்கதே. சட்ட ஒழுங்குமுறைகள் இருந்தும்கூட, அது முறையாகப் பின்பற்றப்படாமல் இருக்கும் சூழலில், நமக்குப் புதிய தொழிற்சாலைகள் தேவையா என்பது குறித்தும் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
காற்று மாசுபாடு ஏற்படுவதற்கான காரணங்களையும் அதற்கு யார் பொறுப்பு, அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பன போன்ற விவரங்களையும் மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டு காற்று மாசுபாட்டைத் தவிர்ப்பதில் அவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்படுவர். இவைதவிர, வாகனங்களின் கரிம உமிழ்வு அளவுகளை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தி முற்றிலுமாக முறைப்படுத்த வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டுமே, நமது பூமிக்கோளத்தை காப்பாற்ற முடியும். பூமிக்கோளத்தைக் காப்பாற்றினால் மட்டுமே அதில் வாழும் மானிடரின் உயிரையும் காப்பாற்ற முடியும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்