தேடுதல்

ஒளி தரும் மெழுகுவர்த்தி ஒளி தரும் மெழுகுவர்த்தி 

இனியது இயற்கை - ஒளி தரும் மெழுகுவர்த்தி

விலங்குகளின் கொழுப்பிலிருந்து எடுக்கப்பட்ட திண்ம எரிபொருளான மெழுகு, இருளில் ஒளியாகவும், செபத்தின் கருவியாகவும் திகழ்கின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மெழுகுவர்த்தி அல்லது மெழுகுதிரி என்பது மெழுகை எரிபொருளாகக் கொண்டு ஒளி தருவது. விலங்குகளின் கொழுப்பிலிருந்து எடுக்கப்பட்ட திண்ம எரிபொருளான மெழுகு இருளில் ஒளியாகவும், செபத்தின் கருவியாகவும் திகழ்கின்றது. ஒளியூட்டியாகவும் சில வேளைகளில் மணம் தரும் வாசனைப் பொருளாகவும் பயன்படும் மெழுகு, வெப்பம் தருவதாகவும் நேரம் காட்டும் கருவியாகவும் பயன்படுகின்றது. மெழுகின் நடுவே உள்ள நூல் திரி மீது, பற்ற வைக்கப்படும் நெருப்பானது, தொடர்ந்து எரிய சுற்றியுள்ள மெழுகுகள் உதவுகின்றன.

மெழுகு இளகி, திரி எரிய ஆரம்பிக்கும் போது வளிமண்டலத்தில் உள்ள உயிர்வாயுவோடு சேர்ந்து தொடர்ந்து சுடவிட்டு எரிய ஆரம்பிக்கின்றது. இந்த சுடரானது தன் வெப்ப ஆற்றலால் மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிய தேவையான வெப்பத்தை சங்கிலி தொடர்வினை வழியாகக் கொடுக்கின்றது.  தீச்சுடரின் வெப்பம் திண்ம மெழுகின் மேல்பாகத்தின் ஒரு பகுதியை உருக்கி, உருகிய திரவ எரிபொருள் திரி வழியாக நுண் புழை ஈர்ப்பாற்றல் உதவியுடன் மேலே செல்கின்றது. மேலே சென்ற திரவ எரிபொருள் இறுதியாக, ஆவியாகி மெழுகுவர்த்தியின் சுடருடன் இணைந்து தொடர்ந்து எரிகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2022, 12:52