இனியது இயற்கை – தீ விபத்திலிருந்து பாதுகாக்கும் முறைகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இந்தியாவில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களில் முதல் மூன்று இடங்களில் தீ விபத்தால் ஏற்படும் மரணங்கள் இடம் பெறுகின்றன. தீக்குளித்து தற்கொலை செய்தல், கவனக்குறைவு மற்றும் அலட்சியப்போக்குகளால் ஏற்படும் தீவிபத்துகளாலும் மரணங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. தீக்காயத்தால் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் ஆழமான காயத்தைவிட பல இடங்களில் ஏற்படும் முதல் நிலை தீக்காயம் ஆபத்தானது. இது எளிதில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும். காயத்தின் மீது குளிர்ந்த தண்ணீரை விடக்கூடாது. மாறாக, ஈரத்துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
தடுப்பு மற்றும் முதலுதவி
தீவிபத்து ஏற்பட்டால் அல்லது தீப்பற்றிக் கொண்டால் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். எண்ணெய் மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலைப் பயன்படுத்தி நெருப்பை அணைக்க முயலலாம். தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைக்க முயற்சி செய்யக் கூடாது. விபத்தின்போது தீப்பற்றி எரியும் நபரை, உடனடியாகக் கீழே தள்ளி கம்பளம், போர்வை அல்லது கோணி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அவரின்மீது இறுக்கிச் சுற்றினால் தீ பரவுவதைத் தடுக்க முடியும். உடுத்தியிருக்கும் ஆடையில் தீப்பற்றிக்கொண்டால் கீழே படுத்து உருளவேண்டும். பயந்து ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாகப் பற்றி எரியும். (இணையதள உதவி)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்