உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு நாளில் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்த கொலோசேயம் ( கோப்புப்படம் 2021) உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு நாளில் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்த கொலோசேயம் ( கோப்புப்படம் 2021)  

நேர்காணல் - உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு நாள்

உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு நாள் கொடுமை மற்றும் வன்முறை எதிர்ப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 ஆம் தேதிக் கொண்டாடப்படுகின்றது.
உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு நாள்- முனைவர் சுந்தரவள்ளி

மெரினா ராஜ் – வத்திக்கான்

பெண்ணுரிமை காத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுத்தல், கண்டித்தல், பெண்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக பெண்கொடுமை மற்றும் வன்முறை ஒழிப்புநாளின் நோக்கமாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 விழுக்காடு  நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, தனிப்பட்ட குடும்பத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தின் முன்னேற்றம், அதில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தில் அடங்கியுள்ளது. இதை உணர்ந்து, வருங்கால தலைமுறைக்குப் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை புரியவைத்து வளர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. குழந்தைகளுக்கு நல்லவற்றை போதித்து வளர்ப்பதில் பெரும்பங்கு தாயைச் சார்ந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்ப்பது, பெண்களை மதித்து நடப்பது போன்றவற்றை, ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு நாள் பற்றிய தனது கருத்துக்களை இன்று நம்மிடம் பகிர்ந்து கொள்பவர் தோழர்  முனைவர் சுந்தரவள்ளி அவர்கள்.

மதுரையைப் பூர்வவீகமாகக் கொண்ட முனைவர் சுந்தரவள்ளி அவர்கள் எழுச்சிமிகு பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர், ஊடகவியலாளர், ஏறக்குறைய இரண்டாயிரத்திற்கும் அதிகமான பட்டிமன்றங்களில் பெண்கள், குழந்தைகள், சமூகம், மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களையும் விவாதங்களையும் உலகம் முழுவதும் பயணம் செய்து பகிர்ந்தளித்திருப்பவர். சன், ஜெயா, ராஜ் போன்ற தமிழ்நாட்டின் பல முன்னனித் தொலைக்காட்சி நிகழ்வுகளில் மட்டுமன்று டெல்லி, கல்கத்தா, மும்பை, கேரளா, கர்நாடகா, போன்ற மாநிலங்களின் தமிழ்ச் சங்கங்களிலும் சிங்கப்பூர், மலேசியா, பினாங்கு, குவைத், அபுதாபி, சவுதி, இலங்கை, ஆப்பிரிக்கா, சிசல் போன்ற உலக தமிழ்சங்கங்களிலும் இலக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர்

நன் மாணாக்கர் விருது, வளரும் பேச்சாளர் விருது, தமிழ்நாடு கல்சுரல் அக்காடமி விருது, திருநங்கைகளுக்காகப் பணி புரிந்ததால் சாதனையாளர் விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது, சிறந்த பெண்மணி விருது, அறிவுச்சுடர் அவ்வையார் விருது, கருத்துரிமை விருது, போராளி விருது, துணிச்சல் விருது என பல விருதுகளை பெற்றவர் தோழர் சுந்தரவள்ளி அவர்கள். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2022, 11:09