தேடுதல்

யுனிசெஃப் நிறுவனம் யுனிசெஃப் நிறுவனம் 

உக்ரைனுக்கு உதவியுள்ள யுனிசெப் அமைப்பு

யுனிசெஃப் நிறுவனம் 7,00,000 டோஸ் அளவிற்கு டெட்டனஸ் மற்றும் டிஃப்தீரியா (டிடி) தடுப்பூசியை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களைப் பாதுகாக்க யுனிசெஃப் நிறுவனம் 7,00,000 டோஸ் அளவிற்கு டெட்டனஸ் மற்றும் டிஃப்தீரியா (டிடி) தடுப்பூசியை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.

உக்ரேனிய தேசிய நோய்த்தடுப்பு அறிக்கையின்படி, குழந்தைகளுக்கு இரண்டு, நான்கு, ஆறு மற்றும் 18 மாதங்களில் டிப்தீரியா மற்றும் டெட்டனஸுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​உக்ரைன் அரசு, பன்னாட்டு வளர்ச்சிக்கு உதவும் US அமைப்புகள் மற்றும் ஜப்பான் மற்றும் இத்தாலிய அரசுகளிடமிருந்து நன்கொடையாளர் நிதியுடன் யுனிசெஃப் வழங்கிய தடுப்பூசிகளைப் பெறுகிறது என்றும் இவ்வறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தடுப்பூசிகள் போலியோ, டிப்தீரியா மற்றும் டெட்டனஸ், தட்டம்மை, ரூபெல்லா, சளி மற்றும் ரேபிஸ் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கின்றன என்றும்,  மொத்தத்தில், 15 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் மனிதாபிமான உதவியாக நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அவ்வறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

UNICEF நிறுவனம் தனக்கு உதவும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து போரினால் உருவாக்கப்பட்ட மனிதாபிமான அவசர நிலைக்குப் பதிலளிப்பதில் உக்ரைனைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றது. இதில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குதல், சுகாதார ஊழியர்களின் திறனை வலுப்படுத்துதல், உக்ரேனிய மருத்துவமனைகளில் வெடிகுண்டுகளால் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்தல், குழந்தைகளுடன் உள்ள குடும்பங்களுக்கு உதவி வழங்குதல், மற்றும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர், சமூகப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளை நடத்துதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2022, 13:56