இனியது இயற்கை - வடகிழக்கு பருவக் காற்று
மெரினா ராஜ் - வத்திக்கான்
திரும்பிவரும் தென்மேற்கு பருவக்காற்று, குளிர்காற்று, கடைசியில் வரும் பருவக்காற்று என்று பல பெயர்களில் கூறப்படும் வடகிழக்கு பருவக்காற்று நிலக்காற்று எனவும் அழைக்கப்படுகின்றது. இது தமிழ்நாடு மற்றும் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு அதிக மழையைத் தருவதோடு மட்டுமல்லாமல். இந்தியாவின் அதிகமான நிலப்பரப்பு மழையைப் பெற்று குளிர்ச்சியுடன் காணப்படக் காரணமாகவும் அமைகின்றது. சூரியன் செப்டம்பர் மாதத்தில் தெற்குதிசை நோக்கி செல்ல ஆரம்பிப்பதால், கடல்பகுதியிலுள்ள காற்று வெப்பமடைந்து அழுத்தம் குறைந்து மேலே எழுகின்றது.
இதனால் நிலப்பகுதியிலுள்ளக் காற்றானது வறண்ட காற்றாகக் கடற்பரப்பினை நோக்கி வீசுவதால், இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் மழைப் பொழிவைத் தருவதில்லை. ஆனால் இப்பருவக்காற்று காலம் தவறிய மழையையும் மழையின் அளவில் வேறுபாட்டையும் தருவதோடு, வங்கக்கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்களுக்கும் காரணமாக அமைகின்றது. இக்காற்றழுத்தத்தாழ்வு மண்டலத்தால், வட கிழக்கு பருவமழை அதிகமாகி புயல் சின்னமாக உருவெடுத்து, கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி பெரும்சேதத்தை உண்டாக்குகின்றது. (இணைய தள உதவி)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்