தேடுதல்

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவும் தன்னார்வலர்கள்  புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவும் தன்னார்வலர்கள்  

இனியது இயற்கை - ஜல் மற்றும் தானே புயல்கள்

2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையைக் கடந்த ஜல் புயலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

2010-ம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் (JAL) புயல், இந்தியப் பெருங்கடல் நோக்கி நகர்ந்தது. நவம்பர் மாதம் 6-ம் தேதி அன்று மணிக்கு ஏறக்குறைய 111 கிலோமீட்டர் வேகத்தில் சென்னையைக் கடந்த இப்புயலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இப்புயல் காரணமாக 54 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.

தானே புயல்

இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் தோன்றிய தானே புயல், 2011-ம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள், மணிக்கு ஏறக்குறைய 165 கிலோமீட்டர் வேகத்தில் கடலூர் மற்றும் புதுச்சேரியை ஒட்டிக் கரையைக் கடந்தது. இந்தப் புயலால் பாதிக்கப்பட்டு 48 பேர் உயிரிழந்தனர். இதில் 39 பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்தப் புயலின் தாக்கத்தினால்  பலரது வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்துபோனது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2022, 12:37