தேடுதல்

காற்றாலைகள் காற்றாலைகள்  (ANSA)

இனியது இயற்கை - கண்ணுக்குத் தெரியாத காற்று

காற்றாலைகள் வழி மின்சாரம், பருவக் காற்றின் வழி மழை, உயிரினங்களின் சுவாசம், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை என, பல வழிகளில் காற்றின் சக்தி மறைந்து செயல்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நீரின்றி அமையாது உலகு என்பதுபோல்தான், காற்றின்றி உலகின் உயிர்கள் வாழ முடியாது. காற்று பூமியில் எல்லையில்லாமல் எங்கும் நிறைந்த உள்ளது. இக்காற்றை குறிக்கும் பல பெயர்கள் தமிழில் காணப்படுகின்றன.

தெற்கிலிருந்து வீசும் காற்றை தென்றல், மற்றும் சோழகம் எனவும், வடக்கிலிருந்து வீசும் காற்றை வாடை எனவும், கிழக்கிலிருந்து வீசும் காற்றை கொண்டல் எனவும், மேற்கிலிருந்து வீசும் காற்றை மேலை, மற்றும் கச்சான் எனவும் பெயரிட்டு அழைக்கின்றோம். காற்று வீசும் வேகத்திற்கு ஏற்பவும் அது வகைப்படுத்தப்பட்டுள்ளது. மென்காற்று, இளந்தென்றல், தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல்காற்று, சூறாவளிக்காற்று என்று எத்தனையோ பெயர்களில் அழைத்து வருகிறோம்.

காற்றினால் ஏற்படும் பயன்கள் என்று கூறவேண்டுமானால், காற்றாலைகள் மூலம் மின்சாரம், வடகிழக்கு, தென்கிழக்கு பருவக் காற்றின் மூலம் மழை, பல்வேறு தாவர வகைகளின் வித்துக்களை தொலை தூரங்களுக்கு எடுத்துச் சென்று பரப்புதல், அனைத்து உயிரினங்களும் சுவாசிக்க உதவுதல், நீர் சுழற்சியில் பங்காற்றுதல், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் முக்கியப் பங்கு என, பயன்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இதுமட்டுமல்ல, எரிபொருள்களை எரிக்கவும், வாகன சக்கரங்களுக்கும்கூட  காற்றுத் தேவை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2022, 14:11