தேடுதல்

பாரீசில் வடிவமைக்கப்பட்ட புதியரக மகிழுந்து  பாரீசில் வடிவமைக்கப்பட்ட புதியரக மகிழுந்து  

இனியது இயற்கை - வாகனத்தின் சக்கரங்களுக்குப் பயன்படும் காற்று.

காற்றடைக்கப்பட்ட சக்கரங்களைப் பயன்படுத்தி தன் பயணங்களை எளிதாக்கிய மனிதன், வளர்ச்சியடைந்து நைட்ரஜன் காற்றை நிரப்பி தன் பயணத்தைப் பாதுகாப்பானதாகவும், எளிமையானதாகவும் மாற்றினான்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஐம்பூதங்களில் ஒன்றான காற்று மனிதர்கள் உயிர்வாழ மூச்சுக்காற்றினைத்தந்து வாழ்நாள் முழுவதும் உடன் பயணிப்பதோடு மட்டுமல்லாமல் மனிதர்களின் பயணத்திற்கும் உதவுகின்றது. சமூக பொருளாதாரம் மற்றும் மனித வாழ்வு, போன்றவை மனிதர்கள் ஒரிடத்திலிருத்து மற்றோர் இடத்திற்கு பயணிக்கும் போது தான் மேம்படத்துவங்கியது. மரத்தாலான உருளைகள் ,சக்கரங்கள் போன்றவற்றால் பயணங்கள் செய்ய வாகனங்களைப் பயன்படுத்த தொடங்கிய மனிதன், அதன் பின் காற்றடைக்கப்பட்ட சக்கரங்களைப் பயன்படுத்தி தன் பயணங்களை இன்னும் எளிதாக்கினான். இன்னும் அதிக வளர்ச்சியடைந்து நைட்ரஜன் காற்றை நிரப்பி பயணத்தைப் பாதுகாப்பானதாகவும், எளிமையானதாகவும் மாற்றினான்.

கோடை காலத்தில் அதிக நேரம் காரை ஓட்டும்போது டயரில் இருக்கும் சாதாரணக் காற்று சூடாகி, வெப்பத்தால் விரிவடைந்து அழுத்தம் அதிகமாகி வெடிப்பதால் பெரிய விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாதாரணக் காற்றைவிட அதிக குளிர்ச்சிதன்மை உடைய  நைட்ரஜன் வாயுவானது  வெளிப்புற வெப்ப நிலை மற்றும் உராய்வு காரணமாக டயர் வெப்பமடைந்தாலும் தன் வெப்பநிலையில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தாது. நைட்ரஜன் காற்று  நிரப்பப்பட்ட டயர்களில் ஏற்படும் சீரான காற்றழுத்தத்தினால், டயர் வெடிப்புக்கான வாய்ப்புக் குறைந்து, நீண்ட தூரம் பாதுகாப்பான பயணங்களை மனிதர்கள் மேற்கொள்கின்றனர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2022, 11:56