இனியது இயற்கை - பனூஸ், மற்றும் நிஷா புயல்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
தமிழகத்தைத் தாக்கிய பெரும் புயல்களில் பனூஸ் புயலும் ஒன்று. பியார், பாஸ், பனூஸ் என மூன்று புயல்கள் இணைந்து ஒரே புயலாக வலுத்தது. 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் உருவான இந்த புயல், டிசம்பர் 7ஆம் தேதி, மணிக்கு 101 கிலோமீட்டர் வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. இந்த புயலால் ஏறக்குறைய 25 ஆயிரம் பேர் வீட்டை விட்டு வெளியேற நேரிட்டது. அதோடு, வட தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் இப்புயல் கடுமையாக பாதித்தது. கடலூர் மாவட்டம் முழுவதும் பாதிப்புக்குள்ளானது.
நிஷா புயல்
பனூஸ் புயலை அடுத்து தமிழகத்தைத் தாக்கிய கடும் புயல் நிஷா. 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி வங்கக் கடலில் உருவான இந்த புயல், மறுநாள் மணிக்கு ஏறக்குறைய 83 கிலோமீட்டர் வேகத்தில் காரைக்காலில் கரையைக் கடந்தது. இப்புயலால் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, 189 பேர் உயிரிழக்கவும் நேரிட்டது. 22 ஆண்டுகளுக்கு பிறகு வங்கக்கடலில் உருவான மிகப்பெரிய புயலாக நிஷா புயல் கருதப்பட்டது. இந்த புயலினால் பாதிக்கப்பட்டு 2800 கால்நடைகள் இறந்தன, மற்றும் ஏறக்குறைய 20 இலட்சம் ஏக்கர் அளவிலான விவசாயப் பயிர்கள் சேதம் அடைந்தன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்