இனியது இயற்கை - கஜா புயலின் கோரத்தாண்டவம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
2018ஆம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி, நள்ளிரவில் கஜா கடும் புயல், தமிழ்நாட்டுக் கடற்கரையை வேதாரண்யம் பகுதியில் கடக்க ஆரம்பித்தது. நவம்பர் 16ம் தேதி காலை 07.00 மணிக்கு புயல் முழுமையாக கரையைக் கடந்தது. கரையைக் கடந்துகொண்டிருந்தபோது பதிவான காற்றின் அதிகபட்ச வேகம் 128 கிலோ மீட்டர்.
இதில் 63 பேர் உயிரிழந்தனர். 12,298 கால்நடைகள் இறந்தன. 88,000 ஹெக்டார் பரப்பளவில் நெற் பயிர்கள், வாழை, தென்னை மரங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன. புயல் வீசிய மாவட்டங்களில் மொத்தமாக 11,32,000 மரங்கள், மற்றும் 56,942 குடிசை வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. 30,404 குடிசை வீடுகள் ஓரளவு சேதமடைந்தன. 30,322 ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. 556 நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டன. 2,49,083 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
மொத்தமாக 1,13,533 மின் கம்பங்கள் சேதமடைந்தன. 1,082 மின் வினியோக மின்மாற்றிகள் சேதமடைந்தன. மின்வாரியத் தொழிலாளர்கள் 24,941 பேர் சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இது தவிர, 372 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. 1,014 நகரும் மருத்துவ முகாம்கள் செயல்பட்டன. இந்த முகாம்கள் வழியாக 84,436 பேர் மருத்துவ உதவி பெற்றனர்.
18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்