இனியது இயற்கை : காற்று மாசுபாட்டினால் ஏற்படும் விளைவுகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
சுற்றுப்புற மாசுபாட்டினால் உடலில் ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன என்றும், வீட்டில் சமையலில் உபயோகப்படுத்தப்படும் எரிபொருள்களிலிருந்து வரும் அசுத்தமான காற்றை சுவாசித்து அதற்குள்ளேயே வாழ்பவர்களுக்கு இன்னும் அதிகமான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. மாசுபட்ட காற்று, புகைப்பிடித்தல், சத்தில்லாத உணவு ஆகியவற்றினால் பக்கவாதம் போன்ற நோய்களும் உருவாகின்றன. ஒவ்வொரு வருடமும் சுமார் 1கோடியே 50 இலட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் ஏற்படும் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். சமையலினால் ஏற்படும் புகை, கழிவுகளின் துர்நாற்றம் போன்றவற்றை அதிகமாக சுவாசிப்பவர்களுக்கு பக்கவாதம் உண்டாகும் ஆபத்து உள்ளது என்று மருத்துவவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். மாசுபட்ட காற்று என்பது ஒரு குறிப்பிட்ட நகரை மட்டுமன்று மொத்த உலகத்தையும் பாதித்து ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கின்றது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தட்பவெப்ப நிலையினால் காற்று இன்னும் அதிகமாக மாசடையாதவாறு கவனம் செலுத்த எரிபொருள் பயன்பாட்டில் சிக்கனத்துடன் செயல்பட ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்