தேடுதல்

தென்றல் காற்றில் அசையும் மலர்கள்  தென்றல் காற்றில் அசையும் மலர்கள்  

இனியது இயற்கை – வாயுக்களின் இயக்கமே காற்று!

காற்றின் பயன்பாட்டினால் தான் நம்மால் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசிக்க முடிகிறது. அவை காற்றினிலே வரும் கீதங்களாக மாறுகின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வாயுக்களின் இயக்கமே காற்று என்று அழைக்கப்படுகிறது. இதன் வேகத்தைப் பொறுத்துதான் அதை தென்றல் என்றும், புயலென்றும் வேறுபல பெயர்களில் நாம் அழைக்கின்றோம். குளிர்ந்த மென்காற்றை தென்றல் என்கிறோம், வேகமான சூறைக்காற்றை புயல் என்கின்றோம். எல்லா உயிரினங்களும் சுவாசிப்பதற்குக் காற்று உதவுகிறது. காற்று வீசுவதால்தான் நாம் பேசுவதை மற்றவர்கள் கேட்க முடிகிறது. காற்றுதான் நமது பட்டங்களையும், காற்றாடிகளையும் சுழல வைக்கிறது. பூமியைச் சுற்றி காற்று மண்டலம் அமைந்துள்ளது. ஏறத்தாழ 1000 கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாகக் காற்று மண்டலம் காணப்படுகிறது. அழுத்த வேறுபாடு காரணமாகத்தான் வாயுக்கள் இயக்கம் பெறுகின்றன. அதையே நாம் காற்று என்கின்றோம். அதையே நமது உடல் உணர்கிறது. காற்றானது அதிக அழுத்தம் உள்ள இடங்களிலிருந்து குறைந்த அழுத்தம் உள்ள இடங்களை நோக்கிப் பாய்கிறது. காற்று மண்டலமானது, கீழ் வெளி, அடுக்கு வெளி, அயனி வெளி, மேல் வெளி என, 4 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 3-வது அடுக்கான அயனிவெளி அடுக்கில் மின் காந்த அலைகள் தடுக்கப்பட்டு அனுப்பப்படுவதால்தான் நம்மால் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசிக்க முடிகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2022, 12:15