தேடுதல்

இந்தியாவின் ஆஜ்மீர் நகரில் காற்று மாசடையும் காட்சி இந்தியாவின் ஆஜ்மீர் நகரில் காற்று மாசடையும் காட்சி 

இனியது இயற்கை – இறைவனின் அற்புத படைப்பு

இன்றைய நவீனமயமாதல், வாகனப் பெருக்கம், தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவற்றினாலும் வளி மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இறைவனின் இயற்கைப் படைப்புகளில் அற்புதமான படைப்பு காற்றாகும். உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததாகக் காணப்படும் காற்றானது இன்று பல வழிகளிலும் மாசடைந்து வருகின்றது. மாசுபாடுகளில் பெரும்பாலானவை மனிதனால் உருவாக்கப்படுகின்றன. ஆனால் சில காற்று மாசுபாடுகள், எரிமலை வெடிப்புகளிலிருந்து வரும் சாம்பல் போன்ற இயற்கைக் காரணங்களினாலும் நிகழ்கின்றன. மேலும், காற்றானது தொழில்செயல்முறைகள் காரணமாக மாசடைகின்றது. வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, காற்றை மாசடையச் செய்கின்றது. திறந்த வெளிக் கழிவுகள் காற்று மாசுபாட்டிற்கு ஓர் ஆதாரமாக அமைகின்றன. இவை மட்டுமல்லாது, காட்டுத்தீ போன்றவற்றாலும் காற்று மாசுபாடு ஏற்படுகின்றது. இன்றைய நவீனமயமாதல், வாகனப் பெருக்கம், தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவற்றினாலும் வளி மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. இது காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கின்றது. முக்கியமாக மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கின்றது, அதனால் காற்று மாசு நிகழ்கின்றது.

காற்று மாசுபாடு காரணமாக ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக உலக வெப்பமயமாதல் ஏற்படுகிறது. இதனால் கால நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு விவசாயம், மற்றும் உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகின்றது. மேலும், காற்று மாசுபடுவதால் அமில மழை போன்றவை உருவாகின்றது. மற்றும், காற்று மாசுபாடு பல்வேறு நோய்களை உருவாக்குகின்றது. தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் காற்றில் கலப்பதை தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். கார்பன்டை ஆக்சைட் உறிஞ்சுவதற்கு அதிகமான மரங்களை நடுதல் வேண்டும்.

சுத்தமான காற்றைச் சுவாசிக்கத்தான் நாம் அனைவரும் விரும்புகின்றோம். எனவே இயற்கையை நாம் பாதுகாப்போம், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2022, 08:48