இனியது இயற்கை - தமிழ்நாடு சுற்றுலா
மெரினா ராஜ்- வத்திக்கான்
வந்தாரை வாழ்வைக்கும் தமிழ் நாடு, பண்பாடும் பாரம்பரியமும் நிறைந்த நாடாக திகழ்ந்து, எண்ணற்ற சுற்றுலாத்தலங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளது. எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் வரலாறும் பாரம்பரியமும் இம்மண்ணில் உள்ளன. கற்பனைக்கு எட்டமுடியாத வகையில் நம் முன்னோர்கள் பல செல்வங்களை அந்தந்த ஊர்களில் வைத்து சென்றிருக்கின்றனர். நாம் இருக்கும் ஊரின் பெருமை பற்றி நமக்கு தெரிந்தது சில என்றால், தெரியாதது பல உள்ளன. நம் நாட்டின் மாண்பை, மகிமையை உணர்ந்து பிறருக்கும் எடுத்துரைக்கும் விதமாக சுற்றுலா தலங்கள் திகழ்கின்றன.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சென்னை, தென்னிந்திய கலாச்சாரம், கலை, மற்றும் பாரம்பரியங்களின் நுழைவாயிலாக 'இந்தியாவின் நான்காவது பெரிய பெருநகரம், மற்றும் இந்தியாவின் கலாச்சார தலைநகரமாகத் திகழ்கின்றது. இது போன்று, மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டி, தமிழ்நாட்டின் நேர்த்தியான கட்டிடக்கலை, மற்றும் கோவில்களுக்கு மிகவும் பிரபலமான, தூங்காநகரம் என்றழைக்கப்படும் மதுரை, மலைகளின் இளவரசி கொடைக்கானல், அழகான ஆன்மீகத் தலமாகும் ராமேஸ்வரம், பட்டு, மற்றும் ஆன்மீகம் சார்ந்த பழமையான கோவில்களுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரம், என ஒவ்வொரு மாவட்டமும் பல சிறப்பம்சங்களைப் பெற்று தமிழ் நாடு மிகச் சிறந்த சுற்றுலா நகரமாக சிறப்புடன் திகழ்கின்றது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்