இனியது இயற்கை: ஆஸ்திரேலிய உயரமான மலைகள்
ஆஸ்திரேலியா, 29 இலட்சம் சதுர மைல்கள் நிலப்பரப்பைக்கொண்டு, உலகில் ஆறாவது பெரிய நாடாக விளங்குகிறது. இந்நாட்டின் 2 கோடியே 43 இலட்சம் மக்களில் பெரும்பாலானோர் தீவுகளைத் தவிர்த்த நிலப்பரப்பிலும், டாஸ்மானியா மற்றும் பல்வேறு சிறிய தீவுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பொருளாதாரத்தில் உலகில் 13வது பெரிய நாடாகவும் விளங்கும் ஆஸ்திரேலியா, நலவாழ்விலும் கல்வியிலும் முன்னணி வகிக்கின்றது. ஆஸ்திரேலியாவில் Kosciuszko, Townsend, Twynam, Rams Head, Rams Head North, Alice Rawson, Carruthers, Northcote, Tate Gungartan ஆகிய பத்தும் உயரமான மலைகள் என கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில், கடல்மட்டத்திற்கு மேலே 2,228 மீட்டர் (7,310 அடி) உயரமுள்ள Kosciuszko மலை, ஆஸ்திரேலியாவில் மிக உயரமான மலையாகும். இது New South Walesல், Kosciuszko தேசிய பூங்காவில் அமைந்துள்ள பனிபடர்ந்த மலைத்தொடராகும். 1840ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி போலந்து நாட்டு நாடுகாண் பயணி Paweł Edmund Strzelecki என்பவர் இம்மலைச் சிகரத்தை அடைந்து, இம்மலைக்கு, போலந்து-லித்துவேனிய சுதந்திரப் போராட்ட இராணுவ அதிபர் Tadeusz Kościuszkoன் பெயரைச் சூட்டினார். ஆஸ்திரேலியாவிலுள்ள இம்மலை, போலந்து நாட்டு கிராக்கோவ் நகரிலுள்ள Kościuszko மலையைப் போன்று தோற்றமளிப்பதாலும், இம்மலைக்கு இப்பெயர் சூட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
Townsend மலை
ஆஸ்திரேலியாவில் Kościuszko மலைக்கு அடுத்திருக்கும் உயரமான மலை Townsend. இம்மலையும் New South Walesல் உள்ள பனிபடர்ந்த மலையாகும். கடல்மட்டத்திற்கு மேலே 2,209 மீட்டர் (7,247 அடி) உயரமுள்ள இம்மலை, Kosciuszko தேசிய பூங்காவிற்கு 3.68 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஆஸ்திரேலியப் பூர்வீக இன மக்களின் பெயர்கள், இம்மலையோடு தொடர்புகொண்டுள்ளன. (நன்றி: விக்கிப்பீடியா)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்