தேடுதல்

இயற்கையில் ஒரு  குடும்பம் இயற்கையில் ஒரு குடும்பம்  

இனியது இயற்கை – கட்டுவது கடினம்... அழிப்பது சுலபம்...!

மரங்களை அழிப்பது என்பது நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. அதாவது, நமக்கு நாமே அழிவைத் தேடிக்கொள்வது போன்றது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

‘அடைப்பதற்கு ஆயிரம் மண்வெட்டி, உடைப்பதற்கு ஒரே மண்வெட்டி’ என்று நம் முன்னோர்கள் தமிழில் அழகான பழமொழி ஒன்றைக் கூறியுள்ளனர். இது நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் பொருத்தமாக அமைந்துள்ளது. இங்கே காடழிப்பைப் பொறுத்தமட்டில், மரங்களை வெட்டிச் சாய்ப்பது மிகவும் சுலபம். ஆனால், அவற்றை நட்டு வளர்ப்பது மிகவும் சிரமம். இன்றைய நிலையில், உலகளாவிய காடழிப்பு நடவடிக்கையில் 95 விழுக்காடு வெப்பமண்டலப் பகுதியில் இருக்கும் பிரேசில் மற்றும் இந்தோனேசியா நாடுகளில் மட்டுமே நிகழ்கின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 1500 கோடி மரங்கள் வெட்டப்படுவதாக ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் ஒரு கோடி ஹெக்டேர் பரப்பளவுள்ள காடுகளை நாம் இழந்து வருகின்றோம் என்று செயற்கைக்கோள்கள் தரும் படங்கள் வழியாகக் கணிக்கப்பட்டுள்ளது. காடழிப்பை ஈடுகட்டும் அளவில் அவற்றில் பாதியளவு மீண்டும் மரக்கன்றுகளை நட்டு காடுகள் வளர்க்கப்படுகின்றன என்றாலும் கூட, அதைவிடவும் அதிக அளவில் நம் காடுகளை இழக்கின்றோம் என்கிறது ‘தரவுகள் காட்டும் நமது உலகம்’ (ourworldindata.org) என்ற ஆய்வு நிறுவனம். ஆகவே, மரங்களை அழிப்பது என்பது நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. அதாவது, நமக்கு நாமே அழிவைத் தேடிக்கொள்வது போன்றது என்பதை இக்கணம் உணர்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2022, 12:20