இனியது இயற்கை – காடழிப்புக்கு மாற்று வழி காண்போம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பொதுவாக, மக்கள்தொகை பெருக்கம்தான் காடழிப்பிற்கு முக்கிய காரணம் என்று தொடர்ந்து சிந்தித்து வரும் வேளையில், நமக்கு வரும் பேராபத்தை நாமே தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதையும் இத்தருணத்தில் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். மரங்கள் தவிர்த்து மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துதல், குறைந்த நிலத்தில் அதிக மகசூல் பெரும் தொழில் நுட்ப வளர்ச்சிகள் ஆகியவை காடழிப்பைத் தவிர்க்கும் நடவடிக்கைகளாக அமையும். அத்துடன் காடழிப்பை ஈடுகட்ட புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாம் வாழும் உலகில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே நிலப்பரப்பு. பிற யாவும் நீர் நிரம்பிய கடல். இந்த நிலப்பகுதியை மட்டும் 100 விழுக்காடு என்று கணக்கில் கொண்டாலும், அதில் 29 விழுக்காட்டு நிலப்பகுதி மனிதர்கள் வாழத் தகுதியற்ற வகையில் உள்ளது. மேலும், 10 விழுக்காடு பனிப்பாறைகளாலும், 19 விழுக்காடு பாலை போன்ற தரிசு நிலங்கள், கடற்கரைகள், மணல் திட்டுகள், பாறைகள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளன. ஒரு விழுக்காடு ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளாக உள்ளன. இவற்றில் மீதமிருப்பதே மனிதர்கள் வாழத் தகுதி கொண்ட நிலப்பரப்பு. இதன் காரணமாகவே, இயற்கை அழிப்பு ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது என்பது நமக்குச் சற்று ஆறுதல் அளிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்