தேடுதல்

இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரிய கிணறு இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரிய கிணறு 

இனியது இயற்கை - நம் முன்னோர்களின் முன்மதி

நம் முன்னோர்கள் நிலத்தடி நீர் உள்ள இடத்தை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பது ஆச்சரியம் தரும் ஒன்றுதான்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் 

நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் எப்படி எந்த தொழில்நுட்ப வசதிகளும்  இல்லாமல் கிணறு வெட்டினார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கும். தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் என்ற நிதர்சன நிலை இருந்தும் அவர்கள் வெற்றி கண்டுள்ளார்கள்.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் அவர்கள்.

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்டவேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டுமாம். அடுத்த நாள் கவனித்தால், எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த தடயங்கள் இருக்குமாம். அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்துவிட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலப் பகுதிக்குள் மேயவிட வேண்டும். பின்னர், அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசைபோடும். அப்படி அவை நான்கு ஐந்து நாட்கள், மேய்ந்தபின் ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம். இது நம் முன்னோர்கள் அக்காலத்தில் பின்பற்றிய அறிவியல் இரகசியம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2022, 14:07