தேடுதல்

ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெர்ந்தோர் 

அதிக எண்ணிக்கையில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர்

ஆண்டுதோறும், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் இங்கிலாந்தை அடையும் முயற்சியில் ஆங்கிலக் கால்வாயைத் துணிச்சலாகக் கடந்து செல்கின்றனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புலம்பெயர்ந்தோரின் வருகையை சமாளிக்க அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், இங்கிலாந்திற்குள் சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 700 புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோர் இந்த வாரத்தில் ஒரே நாளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சென்று, இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு  எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 1, இத்திங்களன்று 696 புலம்பெயர்ந்தோர் 14 படகுகளில் இக்கால்வாயைக் கடந்து சென்றதாகவும், இது ஏப்ரல் மாதத்தில் 651-ஆக இருந்த முந்தைய எண்ணிக்கையைவிட அதிகம் என்றும் தெரிவித்துள்ள இங்கிலாந்து நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம், மேலும் 35 பேரை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகளை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளும் கடலில் தடுத்தி நிறுத்தியுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

ஆண்டுதோறும், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் இங்கிலாந்தை அடையும் முயற்சியில் இந்தக் கால்வாயைத் துணிச்சலாகக் கடந்து செல்கின்றனர் என்றும், 2022-ஆம் ஆண்டில் இதுவரை 17,000-க்கும் அதிகமானோர் நாட்டிற்குள் வந்துள்ளனர் என்றும் அரசுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2020-இல் 8,404 புலம்பெயர்ந்தோரும், 2021 -இல், 28,526 புலம்பெயர்ந்தோரும், சிறிய படகுகள் வழியாக இந்தக் கால்வாயைக் கடந்து சென்றுள்ளனர் என்றும், 2022-ஆம் ஆண்டு இச்சூலை மாதம் வரையில் 3,683 பேர் பயணித்துள்ளனர் என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2022, 15:30