இனியது இயற்கை – வன உயிரினங்களைக் கொல்லும் காடழிப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பன்னாட்டளவில் காடழிப்பு மாபெரும் பிரச்சனையாக எழுந்துள்ள போதிலும், ஆசியாவிலும் மற்ற இடங்களிலும் நிகழ்ந்துவரும் காடழிப்பு என்பது நூற்றாண்டுகளுக்கும் மேலான ஒரு பிரச்சனையாக நீண்டுகொண்டே போகிறது. இங்குள்ள காடுகள் வெப்பமண்டலக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் கட்டுமானப் பொருள்களுக்காகவும் பொழுதுபோக்குத் தளங்களை ஏற்படுத்துவதற்காகவும் மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டு பல்வேறு வழிகளில் கடத்தப்படுகின்றன. எவ்வாறு ஒவ்வாத மாத்திரைகளை நாம் உட்கொள்ளும்போது அது உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றனவோ, அவ்வாறே காடுகளை நாம் தொடர்ந்து அழிக்கும்போது அது மனித இனத்திற்குப் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக, காடழிப்பால் வன உயிரினங்கள் அழிவதுடன், அதன் அருகிலுள்ள நீர்நிலைகளில் வாழும் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களும் அழிகின்றன. சீனாவிலுள்ள் லோஸ் பீடபூமியானது 53 விழுக்காடு முதல் 58 விழுக்காடு வரை காடுகளை உள்ளடக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் சீனாவின் மரங்களைத்தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்