தேடுதல்

அமேசானில் அழிக்கப்படும் காடுகள் அமேசானில் அழிக்கப்படும் காடுகள்  

இனியது இயற்கை – மனிதத் தேவைகளுக்காக மாய்க்கப்படும் மரங்கள்!

தேன் கொடுக்கக் காரணமான தேனீக்களைக் கொன்றழிப்பதுபோல மழைக்குக் காரணமாக அமையும் மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து வருகிறது மனித இனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காலங்கள் செல்லச் செல்ல மனிதரின் தேவைகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. தேன் கொடுக்கக் காரணமான தேனீக்களைக் கொன்றழிப்பதுபோல மழைக்குக் காரணமாக அமையும் மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து வருகிறது மனித இனம். ஒருபுறம் மரங்களை வெட்டினாலும் மறுபுறம் மரங்களை நட்டாலாவது பரவாயில்லை. ஆனால் அதையும் செய்வதில்லை மனித இனம். இதனால்தான் இத்தனை துயரங்களை நாம் அனுபவித்து வருகிறோம். தமிழகத்தின் ஊட்டி, கொடைக்கானல், சிறுமலை, ஏற்காடு, கொள்ளி மலை, சேர்வராயன் மலை போன்ற மலைவாழ்விடங்களில் இப்போது வெப்பத்தின் தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கேரளத்திற்கு மரம், மணல் போன்ற எல்லாமே தமிழகத்திலிருந்து கடத்தப்படுவதாகவும், ஆனால், கேரளா மட்டும் தனது இயற்கை வளங்களை அழியாமல் பார்த்துக்கொள்கிறது என்றும் குற்றச்சாட்டுகள் பல்வேறு ஆண்டுகளாக முன்வைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் FCA ஒப்புதல்களின் கீழ் 2018-19-ம் ஆண்டில் 819 மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான காட்டு மரங்கள் பல்வேறு திட்டங்களுக்காக  அழிக்கப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டில் மட்டும் மனிதரின் தேவைகளுக்காகவும், அவர்களின் குடியேற்றத்திற்காகவும் காட்டு நிலங்களை அதிகம் அழித்த 5 மாநிலங்கள் முறையே: ஆந்திரப் பிரதேசம் (1,446.46 ஹெக்டேர்),  ஜார்க்கண்ட் (1180.6 ஹெக்டேர்), ஒடிசா (1009.858 ஹெக்டேர்), சத்திஸ்கர் (972.11 ஹெக்டேர்) மற்றும் மகாராஷ்டிரா (776.3 ஹெக்டேர்).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2022, 14:30