தேடுதல்

மும்பை நகரின் காய்கறிச்சந்தை  மும்பை நகரின் காய்கறிச்சந்தை  

இனியது இயற்கை -தமிழர் காய்கறிப் பயிர்கள்

பயிர்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு வகையான காய்கறிப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதன் வழியாக விவசாயிகள் அதிக உற்பத்தியுடன் மாதாந்திர காய்கறி சாகுபடி செய்து நல்ல இலாபத்தைப் பெறுகின்றனர்.

மெரினா ராஜ்) வத்திக்கான்

இந்தியாவின் கிராமப்புற மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் காய்கறிகளை காலச்சூழல் கண்டறிந்து பக்குவமாய் பயிரிட்டு நமக்களிக்கின்றனர். நாம் நினைப்பது போல விவசாயம் அவ்வளவு எளிதானது அல்ல. விவசாயத்தின் மிகப்பெரிய ஆபத்து பயிரைப் பற்றியது. சரியான நேரத்தில் விதைக்கப்படும் பயிர்கள் உற்பத்தி அதிகம் தரும். சரியான நேரத்தில் விதைக்கப்படாத பயிர்கள் மிகக் குறைவாக உற்பத்தி தரும்.

பயிர்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு வகையான காய்கறிப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதன் வழியாக விவசாயிகள்  அதிக உற்பத்தியுடன். மாதாந்திர காய்கறி சாகுபடி செய்து நல்ல இலாபத்தைப் பெறுகின்றனர். நாமும் நமது வீடுகளில் சிறிய தோட்டம் அமைத்து நமக்கு தேவைப்படும் காய்கறிகளை நாமே  விளைவித்துக் கொள்ள எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் விளைவிக்கலாம் என்று அறிந்து கொள்வோம்.  

ஜனவரி முதல் ஏப்ரல் வரை குடைமிளகாய், முள்ளங்கி, கீரை, கத்திரிக்காய், பூசணிக்காய், கோவக்காய், பாகற்காய், முலாம்பழம், தர்பூசணி,  காலிஃபிளவர், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், போன்றவற்றையும், மே முதல் ஆகஸ்ட் வரை காலிஃபிளவர், கத்திரிக்காய், வெங்காயம், முள்ளங்கி, மிளகாய், வெள்ளரிக்காய், கத்தரிக்காய், பூசணி, பீன்ஸ், வெண்டைக்காய், தக்காளி, கேரட், கருப்பு கடுகு, கீரை, கொத்தமல்லி போன்றவற்றையும் பயிரிடலாம்.

மேலும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை உள்ள மாதங்களில் கேரட், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, தக்காளி, கருப்பு கடுகு, முள்ளங்கி, கீரை, முட்டைக்கோஸ், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், ப்ரோக்கோலி, கொத்தவரங்காய், பட்டாணி, பிரிஞ்சி, வெங்காயம், பூண்டு, பீட்ரூட், குடைமிளகாய் போன்றவற்றை பயிரிடுவதன் வழியாக நல்ல இலாபத்தினைப் பெறலாம். பருவகாலங்களை மனதில் கொண்டு நாம் உண்ணும் காய்கறிகளை நாமே விளைவித்து நஞ்சற்ற உணவினை உண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முயல்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2022, 12:23