நேர்காணல்: உலக சதுரங்க விளையாட்டில் சாதனைப் பெண் - பகுதி1
மேரி தெரேசா: வத்திக்கான்
தமிழ் நாட்டின் திருச்சி மாநகரில் வாழ்ந்துவரும் கே. ஜெனிட்டா ஆன்டோ அவர்கள், உலக சதுரங்க விளையாட்டு வீராங்கனையாவார். 1987ஆம் ஆண்டில் பிறந்த இவர், தனது மூன்றாம் வயதில் போலியோ என்ற இளம்பிள்ளை நோயால் தாக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வாழ்வைச் செலவழித்துவருகின்றார். இவர் தனது 9வது வயதில் செஸ் என்ற சதுரங்க விளையாட்டைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். IPCA எனப்படும் உலக மாற்றுத்திறனாளிகள் செஸ் விளையாட்டு கழகத்தால் நடத்தப்படும் உலக அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டிகளில் ஆறு முறை தங்கம் வென்று சாதனைப் படைத்திருப்பவர். உலக செஸ் விளையாட்டு ஆசிரியராகவும் (WIM) இவர் விளங்குகிறார். கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி முதல் இம்மாதம் 10ம் தேதி வரை தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு அருகிலுள்ள பூஞ்சேரியில், 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருவதை முன்னிட்டு, கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி, திருச்சி Campion மேல்நிலைப் பள்ளியில், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்த உலக சாதனை நிகழ்ச்சியில், செஸ் வீராங்கனை ஜெனிட்டா ஆன்டோ அவர்கள், 2,140 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் செஸ் விளையாட்டு வகுப்பு எடுத்துள்ளார்.
இச்சாதனை நிகழ்வை முன்னிட்டு ஜெனிட்டா அவர்களைத் தொடர்புகொண்டோம். அவர் பகிர்ந்துகொண்டதன் முதல் பகுதி இதோ...
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்