தேடுதல்

இந்திய விவசாயம் இந்திய விவசாயம் 

இனியது இயற்கை - மானாவாரி விவசாயம்

மானாவாரி விவசாயம் என்றால், மழை பற்றாக்குறை உள்ள ஒரு பகுதியில் அதிகப் பணம் செலவழிக்காமல், அதிக உற்பத்தி செய்ய உதவும் சாகுபடி முறையாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் 

மானாவாரி நிலம் என்றால், மழையை மட்டுமே நம்பி இருக்கும், மழை பெய்தால் மட்டுமே பயிரிடப்படும் நிலமாகும். மழை பொய்த்துவிட்டால் இந்நிலங்கள் பயிரிடப்படுவதில்லை. மானாவாரி நிலம் என்பதை வானவாரி நிலம் என்பதே சரி. வானம் என்றால் ஆகாயம். வாரி என்றால் நீர் என்று ஓர் அர்த்தம் உண்டு. ஆக, வான வாரியை ஆதாரமாகக்கொண்ட நிலம்தான் சிறிது சிறிதாக மருவி மானாவாரி ஆகியுள்ளது என்பர். வானத்தை கிராமப்புறங்களில், மானம் என்று அழைப்பதை இன்றும் கேட்கலாம். அந்த மானத்தை அதாவது வானத்தை மட்டுமே நம்பி உள்ள நிலம்தான் மானாவாரி. புன்செய் நில வேளாண்மை என்பது, மானாவாரி சூழ்நிலையில் பயிர்கள் வளர்ப்பதே ஆகும். மானாவாரி விவசாயம் என்றால், மழை பற்றாக்குறை உள்ள ஒரு பகுதியில் தேவையானதைவிட அதிகப் பணம் செலவழிக்காமல், அதிக உற்பத்தி செய்ய உதவக்கூடிய சாகுபடி முறையாகும்.

இந்த சாகுபடி, முழுமையான பலன் தரவேண்டுமென்றால், இதை அடைய விவசாயி இரண்டு காரியங்களைச் செய்யவேண்டும்:

முதலில், அப்பகுதியின் காலநிலையை அறிந்து கொள்ளுதல் அவசியம். எந்த மாதங்களில் மழை அதிகமுள்ளது, அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை என்ன,  உறைபனிகள் ஏற்படுகின்றனவா இல்லையா என்பன போன்ற பல விடயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, அத்தகையச் சூழல்களில் எவ்விதம் செயல்படவேண்டும் என்பதையும், ஒரு விவசாயி தெரிந்து வைத்திருக்கவேண்டியது அத்தியாவசியம். மேலும், இத்தகைய காலநிலைகளில் எத்தகைய பயிர்களைப் பயிரிடவேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2022, 13:14