இனியது இயற்கை - இலங்கையும் விவசாயமும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இலங்கை ஒரு பாரம்பரிய விவசாய நாடு. வரலாற்று ஆதாரங்களின்படி பார்க்குமிடத்து இந்நாடு ஏறக்குறைய 2500 வருட கால விவசாய வரலாற்றுப் பெருமையைக் கொண்டதாகும். இலங்கை அக்காலம் முதல் இன்று வரை விவசாயப் பொருளாதாரத்தையே சார்ந்திருக்கின்றது. இலங்கையின் நீர்வள நாகரிகத்தை எடுத்துக் கொள்வோமானால், அக்கால மன்னர்கள் நெல் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்த உண்மையை நன்கு அறிந்து கொள்ளலாம். அக்கால மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனக் குளங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. இலங்கை முன்னொரு காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விளங்கியது. பண்டைய மன்னர்களின் ஆட்சிக் காலத்தின்போது இலங்கையில் இருந்து நட்பு நாடுகள் சிலவற்றுக்கு நெல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வரலாற்று இலக்கிய ஆதாரங்களில் கூறப்பட்டிருக்கிறது. நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கும் நெல் உற்பத்திக்கும் இவ்வாறு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்ததன் காரணமாகவே இலங்கையில் எக்காலமும் பஞ்சம் தலைவிரித்தாடியதில்லை. இயற்கை விவசாயம் குறித்த அண்மை அரசின் அணுகுமுறை இதற்கு விதிவிலக்காக இருந்தது. தேயிலை இலங்கைக்கான அந்நிய செலாவணியின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும். மேலும், இலங்கையின் மாறுபட்ட வேளாண்மை காலநிலை பகுதிகளில் ஏறக்குறைய எண்பது வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் வளர்க்கப்படுகின்றன. இலங்கை ஆண்டுதோறும் 800,000 மெட்ரிக் டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்