தேடுதல்

ஜம்முவில் வர்த்தகத்திற்காக பயன்படுக்கப்பட்ட நிலம் ஜம்முவில் வர்த்தகத்திற்காக பயன்படுக்கப்பட்ட நிலம் 

இனியது இயற்கை: நிலமும் பழங்குடிகளும்

இந்தியாவில் உகாய், மற்றும், கொக்கரப்பூர் அணைகள் கட்டப்பட்டதால், 4,60,000 ஹெக்டேர் இயற்கை காடுகளும், நர்மதா அணையால் மட்டுமே, நர்மதா பள்ளத்தாக்கின் 11 விழுக்காடு காடுகளும் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

மேரி தெரேசா: வத்திக்கான்

கிழக்கத்திய மரபு, நிலத்தை ஓர் ஆளாகப் பார்க்கிறது. அதனால்தான் நிலத்தை நாம், நிலமகள், நிலநங்கை என்று அழைக்கிறோம். தமிழகத்தில் நிலத்தைப் பூமித்தாய் என அழைக்கிறோம். ஆனால் இன்று விளை நிலங்கள், விலை நிலங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு நிலத்தை ஒரு வர்த்தகப் பொருளாக பார்க்கின்ற பார்வைதான் அதனைச் சீரழிக்கத் தூண்டுகிறது. நவீன வேதிய உரங்களால் மண், சாரம் இழந்து மடிந்துகொண்டிருக்கிறது. இறால் பண்ணைகள், தோல் பதனிடும் மற்றும், நச்சு நீரை வெளியிடும் வேதியத் தொழிற்சாலைகள், நிலத்தைப் பண்படுத்தவும், பயன்படுத்தவும் முடியாத நிலைக்கு உள்ளாக்கி வருகின்றன. எனவே மண்ணுக்கும், மனிதருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

பிரித்தானியர் ஒருவர், இந்தியாவில் பழங்குடியைச் சார்ந்த ஒருவரின் நிலத்தை விலைக்கு கேட்டார். அதற்கு அவர் இவ்வாறு பதில் கூறினாராம். எங்களுடைய நிலம், உங்களுடைய பணத்தைவிட பன்மடங்கு மதிப்புடையது. வானத்துச் சூரியன் ஒளிரும்வரை, ஆற்று நீர் ஓடும்வரை, இந்நிலங்கள் எங்களுக்கும் எங்களோடு நெருக்கமான உறவுகொண்டிருக்கும் விலங்குகளுக்கும் வாழ்வு கொடுக்கும். இந்நிலத்தை விற்பது, எங்களது வாழ்வை விற்பதற்குச் சமம். மேலும், இந்த நிலங்கள் எங்களுக்குச் சொந்தமானவை அல்ல, மாறாக, அவை ஆண்டவனுக்கேச் சொந்தமானவை. ஆதலால் அவற்றை விற்கவோ வாங்கவோ எங்களுக்கு உரிமை கிடையாது. ஐயா, உங்களது பணத்தை ஒரு நொடிப்பொழுதில் எண்ணிவிடலாம். ஆனால் எங்களது நிலத்து மண்ணை கடவுள் ஒருவரால் மட்டுமே எண்ணமுடியும். உங்களுக்குப் பரிசாக எதை வேண்டுமானாலும் கேளுங்கள், ஆனால் நிலத்தை மட்டும் கேட்காதீர்கள்.

உலகில் 11 விழுக்காடு பயிரிடும் நிலம். 24 விழுக்காடு மேய்ச்சல் நிலம். 31 காடுகள், மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியாகும். (நன்றி அ.பணி.ச.மி.ஜான் கென்னடி சே.ச.)  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2022, 15:09