தேடுதல்

இந்தியாவில் காய்கறி விற்பனைக் கூடம் இந்தியாவில் காய்கறி விற்பனைக் கூடம்  

இனியது இயற்கை : மன்னராட்சி வழி நிலப்பெயர்கள்

வடக்கே வேங்கட மலைக்கும், தெற்கே குமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியில், 6 வகையான மன்னராட்சி நிலப்பகுதிகள் இருந்தன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

  • வேழ முடைத்து மலைநாடு, மேதக்க
  • சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
  • தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
  • நன்னாடு சான்றோர் உடைத்து,

என்பார் ஒளவையார்

''சோழ நாடான தஞ்சையில், நிறைய நெல் விளைந்து மக்களுடைய பசியைப் போக்கியதாகவும், சேர நாடான இன்றைய கேரளா பகுதியில் நிறைய யானைகள் இருந்ததாகவும், பாண்டிய நாடான மதுரையில் நிறைய முத்து கிடைத்ததாகவும், தொண்டை நாடு நிறைய படித்த அறிஞர்களை உடையதாக இருந்ததாகவும் இப்பாடல் வழி அறிய வருகிறோம்.

தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களையும், தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியையும் கொண்டதை சோழநாடு எனவும், மலையாள மாவட்டங்கள், கொச்சி மன்னராட்சி, திருவாங்கூர் மன்னராட்சி என்னும் மூன்றும் சேர்ந்த நிலப் பகுதியை சேர நாடு எனவும், 

மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி என்னும் மூன்று மாவட்டங்களையும்கொண்ட நிலப் பகுதியை பாண்டிய நாடு எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுமையாகவும், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களின் சில ஊர்களையும் உள்ளடக்கியதை தொண்டை நாடு எனவும் அழைத்து வந்தனர்.

வடக்கே வேங்கட மலைக்கும் தெற்கே குமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியில், இந்த நான்கு தவிர, கொங்கு நாடும் இருந்தது. சேலம், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் சேர்ந்த நிலப் பகுதி பழைய காலத்தில் கொங்கு நாடு எனப் பெயர் பெற்றது. கொங்கு நாடு, சிற்றரசர் பலரின்கீழ் இருந்தாலும், அதனை அவ்வப்போது சோழர், சேரர் கைப்பற்றவதுண்டு. இது தவிர, தென் பெண்ணைக்கும் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை, நடு நாடு எனவும் அழைத்து வந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2022, 15:01