இனியது இயற்கை – அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பசுமைமாறாக் காடுகள் நிலநடுக்கோட்டை சுற்றிக் காணப்படுகின்றன. இம்மண்டலத்தில் அதிகமான வெப்பமும் கனத்த மழைப்பொழிவும் இருப்பதால் இங்குள்ள தாவரங்கள் விரைவாகவும் அடா்த்தியாகவும் அதிக எண்ணிக்கையிலும் வளா்கின்றன. நூற்றுக்கணக்கான தாவர இனங்களும், செடிகளும் பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்றன. அயன மண்டல பசுமைமாறாக் காடுகளானது 200 சென்டி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவைப் பெறும் காடுகளாகும். அதனால்தான் இக்காடுகள் ஆண்டு முழுதும் பசுமையாகவே காணப்படுகின்றன. மேலும் இக்காடுகளின் ஆண்டு சராசரி வெப்பநிலையானது 220 செல்சியஸ்க்கு குறையாமலும், இக்காடுகளின் ஈரப்பதமானது ஆண்டுக்கு சராசரியாக 70 விழுக்காட்டிற்கு மேலும் உள்ளது. சிறப்பாக, இக்காடுகளிலுள்ள மரங்கள் சராசாியாக 25 முதல் 35 மீட்டா் வரை உயரமாக வளர்வதுடன், அகன்ற அடிப்பாகத்தையும் வலிமையான விழுதுகளையும் கொண்டுள்ளன. ஆகையால், இக்காடுகள் பல அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களின் தோற்றத்தைக் கொண்டிருப்பதால் இவற்றில் சூாிய ஒளி கூட ஊடுருவ முடிவதில்லை.
அயன மண்டல பசுமைமாறாக் காடுகளானது கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், அசாம், மேகாலயா, நாகலாந்து, மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் மிசோரம், ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இக்காடுகளில் இரப்பர், எபானி, ரோஸ், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் பெருமளவில் உள்ளன
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்