தேடுதல்

நீர்த்தேக்கமாக அன்று இருந்தது நீர்த்தேக்கமாக அன்று இருந்தது 

இனியது இயற்கை - நில வளங்கள் அபகரிக்கப்படுகின்றன

இன்று, 25 கோடி மக்கள் நேரடியாக பாலைவனமாக்கலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நூற்றாண்டாக, ஏறக்குறைய 11% விளைநிலங்கள் இழக்கப்பட்டுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலகின் பல நாடுகளில், நில வளங்கள் வேகமாக குறைந்து வருகின்றன: உற்பத்தி நிலம் கட்டுமானம், சுரங்கம், நகரங்கள் மற்றும் பிற குடியேற்றங்களால் விழுங்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தேக்கங்களைக் கட்டும்போது வெள்ளத்திலும் மூழ்கியுள்ளது. போதிய பராமரிப்பின்மை காரணமாக விவசாய நிலங்களின் பெரும் பகுதிகள் இழக்கப்பட்டுள்ளன.

10-15 ஆண்டுகளுக்கு முன்பு கூட, பூமியின் மக்கள்தொகைக்கு தனிநபர் விளைநிலம் 0.45-0.5 ஹெக்டேராக இருந்தது, தற்போது அது ஏற்கனவே 0.25 ஹெக்டேராக உள்ளது. ஒரு நபருக்கு முழு உணவு வழங்குவதற்கு 0.3-0.5 ஹெக்டேர் விளைநிலம் தற்போது தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது;

ஏற்கனவே இன்று, 25 கோடி மக்கள் நேரடியாக பாலைவனமாக்கலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக மக்கள்தொகை, மேய்ச்சல் நிலங்களின் விரிவாக்கம், அதிக தீவிர விவசாய நடைமுறைகள் மற்றும் மோசமான நீர் மேலாண்மை ஆகியவை பாலைவனமாவதற்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளாகும்.

இன்று உலகின் நிலப்பகுதி, உற்பத்திக்கு ஏற்ற விவசாய நிலம், குடியேற்றங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம், தொழில், போக்குவரத்து மற்றும் பிற தொடர்புடைய தொழில்களில் பயன்படுத்த நிலம், சிறப்பு மதிப்புள்ள பிரதேசங்கள் அதாவது, வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள், பொழுதுபோக்கு பகுதிகள் மற்றும் பிற, வனப்பகுதிகள், நீர்நிலைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நில வளங்கள், என பல பயன்பாட்டுக் காரணங்களுக்காக பிரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

கால்நூற்றாண்டாக, ஏறக்குறைய 11% விளைநிலங்கள் இழக்கப்பட்டுள்ளன, இது 500 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலத்தின் வருடாந்திர இழப்பைக் கணக்கிடுவதை சாத்தியமாக்குகிறது. விளைநிலங்கள் குறைக்கப்படுவதற்கான காரணங்கள் வேறுபட்டவை, அவற்றில் கட்டுமானத்திற்கான அபகரிப்பு முக்கியமாக உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2022, 13:22