தேடுதல்

மாங்குரோவ் காடுகள் மாங்குரோவ் காடுகள்  

இனியது இயற்கை – மனிதரைக் காக்கும் மாங்குரோவ் காடுகள்

பேரலைகளிலிருந்து குடியிருப்புப் பகுதிகளைக் காப்பதோடு, நீர் மாசடைவதைத் தடுக்கும் வகையில், இயற்கையின் கொடையாக அமைந்திருக்கின்றன மாங்குரோவ் காடுகள்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடலுக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட களிமண் நிறைந்த வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல நாடுகளின் கடலோர பகுதிகளில் உப்பு நீரில் வளர்வதுதான் மாங்குரோவ் எனப்படும் சதுப்பு நிலக் காடுகள். பலவகைப் பெயர்களில் அழைக்கப்படும் இத்தகைய காடுகள் கடல் உணவு உற்பத்திக்குப் பெரிதும் துணைபுரிகின்றன. தமிழ்நாட்டில் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடுகள் ஆகும். பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள், வடக்கே வெள்ளார் முகத்துவாரம் மற்றும் தெற்கில் கொலரூன் முகத்துவாரம் ஆகிய இரண்டு முக்கிய முகத்துவாரங்களுக்கு இடையே அமைந்துள்ளன.

தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாங்குரோவ் காடுகள் உள்ளன. மாங்குரோவ் காடுகளில், 60 வகையான மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியாவில், 32 வகையான மரங்கள் உள்ளன. சென்னை நகரில், மாங்குரோவ் காடுகள், 1975ல், ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்பட்டபோதும் நாளடைவில் அவைகள் அழிந்துபோய்விட்டன. கடலில் ஏற்படும் பேரலைகளால் குடியிருப்பு பகுதிகளின் பாதிப்பைத் தடுப்பதோடு, நிலத்தடி நீர் மாசடைவதைத் தடுக்கும் வகையில், இயற்கையின் கொடையாக அமைந்திருப்பதுதான் மாங்குரோவ் காடுகள். தமிழகக் கடற்கரையோரம் இருந்த காடுகள், பல இடங்களில் ஆக்கிரமிப்பால் அழிந்துவிட்டன. இதனால், 2004ல் ஏற்பட்ட சுனாமியால், உலகில், பல்லாயிரம் பேர் பலியாயினர். சென்னையிலும், அதிக உயிர் இழப்புக்கள் ஏற்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2022, 08:55