தேடுதல்

ஏமனில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏமனில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்  

உரிமை மீறல்களுக்குப் பலியாகும் சிறார் குறித்த விழிப்புணர்வு நாள்

போர் இடம்பெறும் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறார்க்கெதிரான வன்முறைகளால் 25 கோடிக்கும் மேற்பட்ட சிறார் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகில் ஏறத்தாழ 42 கோடிச் சிறார், அதாவது உலகின் மொத்தச் சிறாரில் ஏறத்தாழ ஐந்தில் ஒருவர் ஆயுதமோதல்கள் நடைபெறும் சூழல்களில் வாழ்கின்றனர் என்று, இலண்டனை மையமாகக்கொண்ட Save the Children என்ற பன்னாட்டு சிறார் பாதுகாப்பு பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது. 

போரில் பயன்படுத்தப்படல், கொல்லப்படல், பாலியல் வன்முறை, கடத்தல், மனித வர்த்தகம், பள்ளிகள் மற்றும், மருத்துவமனைகள் தாக்கப்படல், மனிதாபிமான உதவிகள் தடைசெய்யப்படல் போன்ற உரிமை மீறல்களை, சிறார் எதிர்கொள்கின்றனர் என்று அவ்வமைப்பு மேலும் கூறியுள்ளது. 

1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி, பாலஸ்தீனம் குறித்த சிறப்பு அவசரகால பொதுப் பேரவையைக் கூட்டிய ஐக்கிய நாடுகள் நிறுவனம், இஸ்ரேல் நாட்டின் வன்முறைத் தாக்குதல்களுக்குப் பெருமளவில் பலியாகிய பாலஸ்தீனிய மற்றும், லெபனோன் நாட்டின் சிறாரின் நிலைகண்டு அதிர்ச்சியடைந்து, இச்சிறார் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கு, ஓர் உலகளாவிய நாளை உருவாக்கியது.

உரிமை மீறல்களுக்குப் பலியாகும் சிறார் குறித்த விழிப்புணர்வு உலக நாள், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 4ம் தேதி கடைப்பிடிக்கப்படவேண்டும் என்றும், ஐ.நா.பொது அவை அறிவித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2022, 15:37