நூறு நாள்கள் போரின் தீமைகள், போர்களே வேண்டாம் எனக் கூறவைக்கின்றன
மேரி தெரேசா: வத்திக்கான்
இரஷ்யா, உக்ரைனை ஆக்ரமித்து கடுமையான தாக்குதல்களைத் தொடங்கி ஜூன் 3, இவ்வெள்ளிக்கிழமையோடு நூறு நாள்கள் ஆகியுள்ளவேளை, அப்போர் விளைவித்துள்ள தீமைகள், போர்கள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும் என உலக சமுதாயத்தைக் கூற வைத்துள்ளது.
ஜூன் 4, இச்சனிக்கிழமையன்று, போர் இடம்பெறும் சூழல்களில் பல்வேறு உரிமை மீறல்களுக்குப் பலியாகும் சிறார் குறித்த விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படும்வேளை, உக்ரைனில் போரினால் பலியாகியுள்ள மற்றும், பாதிக்கப்பட்டுள்ள சிறாரின் நிலை குறித்தும் வத்திக்கான் செய்தியாளர் ஒருவர் இவ்வாறு தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனில் போர் நிறுத்தப்படாமல் இருப்பதற்கு, மேற்குலகும் ஒரு காரணம் என்றும், இரஷ்யா தன் நடவடிக்கைக்கு ஒருபோதும் நியாயம் சொல்ல முடியாது என்றும் உரைத்துள்ள அச்செய்தியாளர், அமைதிக்காக அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தையரின் எண்ணங்களையும் பதிவுசெய்துள்ளார்
இப்போர் குறித்துப் பேசியுள்ள உக்ரைன் அரசுத்தலைவர் ஜெலன்ஸ்கி அவர்கள், உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து, இதுவரை இரஷ்ய இராணுவம், இரண்டு இலட்சம் குழந்தைகளைக் கடத்தியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
உக்ரைன் போரில் இதுவரை 243 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 446 பேர் காயமடைந்திருக்கின்றனர். மேலும், 139 பேர் காணவில்லை எனவும் ஜெலன்ஸ்கி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்