தேடுதல்

சுக்ரவாரி ஏரி சுக்ரவாரி ஏரி  

இனியது இயற்கை: சுக்ரவாரி ஏரி

இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள சுக்ரவாரி ஏரி, சுக்ரவாரி தலாவ், காந்தி சாகர் ஏரி, யும்மா ஏரி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

மகாராஷ்டிர மாநிலம் இயற்கை அழகால் நிறைந்துள்ள ஒரு நிலப்பகுதியாகும். நாக்பூரிலிருந்து நாசிக், நாசிக்கிலிருந்து கோலாபூர் என அம்மாநிலத்தின் எல்லாப் பகுதிகளும் மலைகள், ஏரிகள், வனங்கள் என இயற்கையால் சூழப்பட்டுள்ளன. இம்மாநிலத்தின் பல பகுதிகள், குறிப்பாக, ஏரிகள், சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளன. சில ஏரிகள் சுத்தமான நீரைக்கொண்டிருக்கின்றன, சில ஏரிகள் பசுமையான காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளன. நாக்பூர் நகரில் மட்டுமே, சுக்ரவாரி ஏரி, ஆம்பஜாரி ஏரி, கோரோவாடா ஏரி ஃபுட்டாலா ஏரி உட்பட ஏறத்தாழ 11 ஏரிகள் உள்ளன. புல்டானா மாவட்டத்திலுள்ள லோனார் ஏரி, எரிமலைப் பாறையிலுள்ள உலகின் ஒரே உப்பு நீர் ஏரியாகும். 

சுக்ரவாரி ஏரி

நாக்பூரில் உள்ள சுக்ரவாரி ஏரி (Shukrawari Lake), சுக்ரவாரி தலாவ், காந்தி சாகர் ஏரி, யும்மா ஏரி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த ஏரி நாக்பூரில் இராமன் அறிவியல் மையத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. 275 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலக்கட்டத்தில், அப்போதைய நாக்பூர் ஆட்சியாளர் Chand Sultan என்பவரால், இந்த ஏரி அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஏரி, நீர்த்தேக்கத்துடன் இணைக்கப்பட்ட நாக் நதிக்கு, நீரோடைகளை உருவாக்கித் திருப்பி விடப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கு 'யும்மா தலாப்' என்று இவர் பெயரிட்டார். பின்னர், Bhonsla மற்றும் பிரித்தானியர் ஆட்சிக் காலங்களில் இது 'சுக்ரவாரி தலாவ்' என்று அறியப்பட்டது போன்சலே பரம்பரையைச் சேர்ந்த முதலாம் Raghuji போன்சலா, 1742ம் ஆண்டில் நாக்பூரை தனது அரசின் தலைநகராக அறிவித்தார்.

அழகிய செவ்வக வடிவிலான இந்த ஏரி, இப்போது கல் சுவர்கள் மற்றும் இரும்புக் கம்பிகளால் மூடப்பட்டுள்ளது. ஏரியின் நடுவில் ஒரு சிறிய தீவு போன்று காட்சியளிப்பது தோட்டமாகும். இந்த தோட்டம், spoon gardenShiva என அழைக்கப்படுகிறது. இத்தோட்டம் இரவில் மஞ்சள் பாதரச ஒளியால் ஒளிர்கிறது. (நன்றி: விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2022, 15:42