தேடுதல்

கோரேவாதா ஏரி, மகாராஷ்டிரம் கோரேவாதா ஏரி, மகாராஷ்டிரம் 

இனியது இயற்கை: கோரேவாதா ஏரி

கோரேவாதா ஏரி , இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நகரின் வடமேற்கு எல்லையில் 2,350 அடி நீளம் கொண்ட அணையுடன் உருவாக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான்

கோரேவாதா ஏரி (Gorewada Lake), இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நகரின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ளது. 2,350 அடி நீளம் கொண்ட அணையுடன் இந்த ஏரி உருவாக்கப்பட்டது. 1912ம் ஆண்டு நீர் மேலாண்மை துறையினால் ஏரி மேம்படுத்தப்பட்டது. நாக்பூரில் அப்போது வாழ்ந்த 1.01 இலட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக கோரேவாதா ஏரி திகழ்ந்தது.  இந்த ஏரிக்கு, அடர்த்தியான காடு சூழ்ந்த பகுதி எல்லையாக இருப்பதால், அந்த ஏரி, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பறவை இனங்கள் மற்றும் சில விலங்குகள் குடியிருக்கின்றன. மகாராஷ்டிர மாநில அரசு ஏரியைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் 1914 எக்டேர் பரப்பளவில் வேட்டைக்குழு ஒன்றை உருவாக்கியது. நாட்டின் முதலாவது வேட்டைக்குழு இதுவென பல செய்தித்தாள்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. 2005ம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த வேட்டைக்குழு திட்டம் 2016ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சிறுத்தைகள், இந்திய மான்கள், மயில்கள் மற்றும் சில விலங்குகள் அங்கு இருப்பதாக அறியப்படுகிறது. கோரேவாதா ஏரிக்கு அருகிலுள்ள சாலை, கோரேவாதா சுற்றுச் சாலை என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் பல திறந்தவெளி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்காபாய் தக்லி, போர்கவுன், கிட்டிகாதான் போன்றைவை ஏரிக்கு அருகிலுள்ள சில பகுதிகளாகும். நாக்பூர் நகருக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக இருப்பினும் ஏரியைச் சுற்றியுள்ள குப்பை, அதில் எறியப்பட்ட நெகிழிப் பொருள்கள் போன்றவைகளால் ஏரியின் சுற்றுப்புறம் மாசடைந்து காணப்படுகிறது. மீன் பிடிப்பு, கடல் சிப்பிகள் போன்றவற்றையும் இங்கு காணமுடிகிறது. (உதவி: விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2022, 15:33