தேடுதல்

கின்சி ஏரி கின்சி ஏரி 

இனியது இயற்கை: கின்சி ஏரி

கின்சி ஏரி, மத்திய இந்தியாவிலுள்ள முக்கியமான ஏரிகளில் ஒன்றாகும்

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியாவின் நாக்பூர் மாவட்டத்தில் ராம்டெக் நகருக்கு அருகில் உள்ள கின்சி ஏரி, மத்திய இந்தியாவிலுள்ள முக்கியமான ஏரிகளில் ஒன்றாகும். பசுமையான காடுகளால் சூழப்பட்டு கவினுறக் காட்சியளிக்கும் கின்சி ஏரி, ராம்டெக்கிலிருந்து ஏறத்தாழ 3.5 கிலோ மீட்டர் மற்றும், நாக்பூரிலிருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் நடைபெறும் படகோட்டம், இன்னும், நீர்ப்பாசனம், உணவகம், தங்கும் விடுதிகள் ஆகியவை ராஜ்கமால் சுற்றுலாத்தல நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கின்சி ஏரிக்கு அருகில் சிறார் பூங்காவும் உள்ளது. இங்கு லிவ் தங்கும் விடுதிகளும் இயக்கப்படுகின்றன. இந்த ஏரி, மத்திய இந்தியாவின் மிகப் பெரிய படகு மையமும் ஆகும். (நன்றி: இணையதளங்கள்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2022, 14:08