தேடுதல்

அழிக்கப்படும் மழைக்காடுகள் அழிக்கப்படும் மழைக்காடுகள்   (AFP or licensors)

இனியது இயற்கை – காங்கோவில் காணாமல் போகும் காடுகள்

காங்கோ காடுகள் ஏறத்தாழ 85 விழுக்காடு அளவிற்கு அழிக்கப்பட்டுள்ளதால், மனிதரின் வாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காங்கோ படுகை என்பது உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடு ஆகும். இந்தப் படுகை பாதிக்கு மேல் காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டுக்குள் வருகிறது. பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களை நடத்தும் சட்டவிரோத மரம் வெட்டும் நடவடிக்கைகளால்தான் இங்குக் காடழிப்பு அதிகம் நடைபெறுகிறது எனச் சுற்றுச்சூழல் பிரசார அமைப்பான Greenpeace தெரிவிக்கிறது. கரி தயாரிப்புக்காக காடுகளை அழித்தல், நகர்ப்புற விரிவாக்கம், சுரங்கத் தொழில் ஆகிய வேறு அச்சுறுத்தல்களும் இங்கு நிலவுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஏறத்தாழ 5 இலட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக Global Forest Watch என்ற அமைப்பு தெரிவிக்கிறது.   

காங்கோ காடுகள் ஏறத்தாழ 85 விழுக்காடு அளவிற்கு அழிக்கப்பட்டு, மனிதரின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி வருகிறது. 2050ம் ஆண்டில் இது இன்னும் உச்சம்தொடும் என்று மத்திய ஆபிரிக்காவில் காடழிப்பு பற்றிய மதிப்பீடுகள் கணித்துள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் வாழ்வதற்கு காடுகளை நம்பியுள்ள நிலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டும் 4 கோடி மக்கள் இந்தக் காடுகளில் வாழ்கின்றனர். பொதுவாக, பருவமழைக் காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கும் வங்கிகளாக காடுகள் செயல்படுகின்றன. மரங்களே இல்லாத சாதாரண நிலப்பரப்பில் மழை பெய்யும்போது மழை நீரில் 3 விழுக்காடே பூமியினுள் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள 97 விழுக்காடு நீரும் உடனடியாக வெளியேறி விடுகின்றது. ஆனால், காடுகளில் பெய்யும் மழை நீரில் 33 விழுக்காடு உள்ளிழுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. இதுதான் காடுகளை நம்பி வாழும் மக்களுக்கு மிகப்பெரும் கொடையாக அமைந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2022, 13:06