தேடுதல்

நைனித்தால் ஏரி நைனித்தால் ஏரி 

இனியது இயற்கை : நைனித்தால் ஏரி

நைனித்தால் நகரம் முழுவதும் நிலப்பரப்பு குறைவு, நீர்நிலைகள் அதிகம். அதனால் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நைனித்தால் ஏரி, இந்தியாவின் வட மாநிலமான உத்திரகாண்டில் இமயத்தின் வெளிப்புற குமோன் மலைப்பிரதேச பகுதியிலுள்ள, நைனித்தால் எனும் நகரருகே இயற்கை நன்னீர் ஏரியாக உள்ளது. இந்த நகரத்திற்கு நைனிடால் என்ற பெயரை கொடுத்த இந்த ஏரி, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வடஇந்திய ஏரிமாவட்டம் என்றழைக்கப்படும் நைனித்தால் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, குமோன் மலை பகுதியில் உள்ள நான்கு ஏரிகளில் ஒன்றாகும். சாத்தலை ஏரி, பீம்தால் ஏரி, மற்றும் நுகுசியாதால் ஏரி என மற்ற மூன்று ஏரிகள் இவ்வேரியருகேயுள்ளன.

நைனித்தால் ஏரி, ஒன்றரை கிலோ மீட்டர் நீளமுடையதாகவும், அரை கிலோ மீட்டர் அகலமுடையதாகவும், 90 அடிகள் வரை ஆழமுடையதாகவும் உள்ளது. கடல் மட்டத்திற்கு 6358 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில், சுற்றியுள்ள இயற்கை எழிலை இரசித்துக்கொண்டே படகு சவாரி செய்வது சுகமான அனுபவம். இதற்கென தனி படகுகள் உள்ளன. இந்த ஏரியைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை மல்லிதால் என்று அழைக்கிறார்கள். இந்த நகரம் முழுவதும் நிலப்பரப்பு குறைவு, நீர்நிலைகள் அதிகம். அதனால் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2022, 15:32