இனியது இயற்கை– அழிந்து வரும் அயன மழைக் காடுகள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அயனமண்டலத்திற்கும், மிதவெப்பமண்டலத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளில் வளரும் காடுகளே ‘அயன மழைக்காடுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவ்விடங்களின் காலநிலை அயனமண்டல, மிதவெப்பமண்டலக் காலநிலைகளுக்கு இடைப்பட்ட ஒரு காலநிலையைக் கொண்டிருக்கும் (விக்கி பீடியா). பிரேசிலின் அமேசான் காடுகள், ஆபிரிக்காவின் காங்கோ காடுகள், மலகாசி, கெய்ட்டி, பிலிப்பீன்ஸ், இலங்கையிலுள்ள சசிங்கராஜவனக் காடுகள், சுமத்திரா, ஜாவா, பனாமா, நைஜீரியா, இந்தோனேசியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, காபோன், கிழக்கு ஆஸ்திரேலியா போன்றவற்றில் அயன மழைக்காடுகள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில்தான் இந்தக் காடுகள் அதிகம் அழிக்கப்பட்டு வருகின்றன.
உலகளவில் 449.9 கோடி ஹெக்டேராக உள்ள மொத்த காட்டு வளத்தில் அயன மண்டல மழைக்காடுகளின் அளவு 234.6 கோடி ஹெக்டேராக உள்ளது. இக்காடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 40 இலட்சம் ஹெக்டேர் வரை இடைநிலைக் காடுகளாக மாற்றமடைந்து வரும் அதேவேளை, 1945ம் ஆண்டுக்குப் பின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இக்காடழிப்பின் அளவு அதிகரித்துள்ளதோடு, மத்திய அமெரிக்காவில் ஏறத்தாழ 38 விழுக்காடு காடுகளும், ஆபிரிக்காவில் 24 விழுக்காடு காடுகளும் அழிக்கப்பட்ட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மொத்தத்தில் இவ்வயனமண்டல மழைக்காடழிப்பானது புவிபரப்பில் ஆண்டுதோறும் 65 இலட்சம் ஹெக்டேர் அளவாக உள்ளது. இது மொத்த நிலப்பரப்பில் 0.6 விழுக்காடு ஆகும். அயன மழைக்காடுகளின் சராசரியான அடர்த்தி 12 கோடியே 2 இலட்சம் ஹெக்டேர் ஆகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்