தேடுதல்

இந்தோனேசியாவில் மரங்கள் அழிக்கப்பட்ட மலைகள் சூழ்ந்த ஒரு ஏரியின் தோற்றம் இந்தோனேசியாவில் மரங்கள் அழிக்கப்பட்ட மலைகள் சூழ்ந்த ஒரு ஏரியின் தோற்றம்  

இனியது இயற்கை– இந்தோனேசியாவில் இல்லாமல் போகும் காடுகள்

கடந்த பத்தாண்டுகளில் 47 இலட்சம் ஹெக்டேர் காடுகள் அழிந்துள்ளன. பிரேசில், காங்கோ ஜனநாயகக் குடியரசு, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இந்த அழிவு அதிகம் நடந்துள்ளது என்பது முக்கியம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த இருபது ஆண்டுகளில் உலகில் காடழிப்பு அதிகம் நடந்த 5 நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று மிகவும் என்பது குறிப்பிடத்தக்கது. 2002 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தோனேசியாவில் 97.5 இலட்சம் ஹெக்டேர் காடுகள் அழிவைச் சந்தித்துள்ளதாக Global Forest Watch  அமைப்பு கூறுகிறது. காடுகள் அழிப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது பாமாயில் தோட்டத் தொழில். அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களின்படி 80 விழுக்காடு காட்டுத் தீ இதற்காகவே மூட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. 2016ல் அதிகபட்சமாக 9.29 இலட்சம் ஹெக்டேர் காடுகள் காணாமல் போயியுள்ளன. ஆனால், அதன் பிறகு காடழிப்பு விகிதம் குறைந்து வந்தது. ஆனால் 1990 முதல் 100 கோடி ஏக்கர் காடுகள் அழிவைச் சந்தித்துள்ளன என்றும் இதற்கு முக்கியக் காரணம் வேளாண்மை தொழில் என்றும் கூறுகிறது ஐ.நா.அவை.

அண்மையில் நடந்த காலநிலை மாநாட்டில், 2030க்குள் காடழிப்பைத் தடுத்து நிறுத்தவும், காடுகளை வளர்க்கவும் 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். மேலும் காடழிப்பை 2020ல் பாதியாகக் குறைக்கவும், 2030ல் நிறுத்தவும் 2014ம் ஆண்டே ஒரு திட்டத்தை அறிவித்தது ஐ.நா. அவை. ஆனால் இது முழுமையான பலனை அளிக்கவில்லை என்பதுதான் உண்மை. இயற்கையாகவோ, மரம் நட்டதாலோ சில இடங்களில் மறுகாடு வளர்ப்பு நடந்துள்ளது. ஆனாலும் கரியமில வாயுவை முழுமையாக உறிஞ்சும் அளவுக்கு மரங்கள் பக்குவமடைய பல ஆண்டுகளாகும் என்று பிபிசி உண்மை அறியும் குழுவும் தெரிவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 47 இலட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பிரேசில், காங்கோ ஜனநாயகக் குடியரசு, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இந்த அழிவு அதிகம் நடந்துள்ளது என்பது முக்கியம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2022, 13:36